For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி.. பாகிஸ்தான் வருமா, வராதா?

கராச்சி: இந்தியாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்பதில் திடீர் சிக்கல் எழுந்துள்ளதாம். ஒரு வேளை பாகிஸ்தான் அணியால் வர முடியாமல் போனால், அதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடும் அபராதம் விதிக்கும் வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியா சென்று கிரிக்கெட் விளையாட இன்னும் பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்கவில்லையாம். இதனால்தான் சிக்கல் எழுந்துள்ளதாம்.

ஒரு வேளை இப்போட்டித் தொடரில் தாங்கள் விளையாடாமல் போனால் தங்களுக்கு ஐசிசி கடும் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷஹாரியார் கான் கூறியுள்ளார்.

இதுவரை அனுமதியில்லை

இதுவரை அனுமதியில்லை

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பாகிஸ்தான் பிரதமரின் செயலகத்துடன் தொடர்பு கொண்டு பேசினேன். அரசு அனுமதி தொடர்பாக விசாரித்தேன். இதுவரைக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

அனுமதி இல்லாமல் போக முடியாது

அனுமதி இல்லாமல் போக முடியாது

பாகிஸ்தான் அரசு அனுமதி தராவிட்டால் எங்களால் உலகக் கோப்பைப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. அப்படி நடந்தால் ஐசிசி கடும் அபராதம் விதிக்கும் வாய்ப்புள்ளது.

பரிசீலனை செய்வதாக தகவல்

பரிசீலனை செய்வதாக தகவல்

எங்களது கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக மட்டும் பிரதமரின் செயலகம் தெரிவித்துள்ளது. விரைவில் முடிவு தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர் என்றார் அவர்.

அனுமதி கிடைக்கும்

அனுமதி கிடைக்கும்

இருப்பினும் பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாட பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்கும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Thursday, February 18, 2016, 15:35 [IST]
Other articles published on Feb 18, 2016
English summary
Pakistan Cricket Board (PCB) Chairman Shahryar Khan today admitted that if the national team was unable to participate in next month's World Twenty20 in India, the body could be fined by the ICC.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X