For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜம்முன்னு ஒரு ஆட்டம்.. ஜில்லுன்னு ஒரு வெற்றி.. ஸ்காட்டை விரட்டியடித்த பாகிஸ்தான்!

ஸ்காட்லாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி

எடின்பர்க்: இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி நேற்று தனது முதலாவது 20 ஓவர் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது. எடின்பர்க்கில் நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


பேட்டிங்கிற்கு சாதகமான எடின்பர்க்கில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹமத் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். துவக்க ஆட்டக்காரர்களாக பாக்கர் ஜமான் மற்றும் அஹமத் ஷாசாத் முதல் விக்கெட்டிற்கு 33 ரன்கள் சேர்த்தனர். இருவரும் முறையே தலா 21 மற்றும் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய ஹுசைன் தள்ளாட் 18 ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 87 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் சர்பராஸ் மற்றும் சோயிப் மாலிக் தங்களது அதிரடியான அனுபவ ஆட்டத்தால் அதி விரைவாக ரன்களை சேர்த்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 204 ரன்களை எடுத்தது. சர்பராஸ் கான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 89 ரன்களை எடுத்தார். இதுவே 20 ஓவர் போட்டிகளில் அவரது அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 Pakisthan beat Scotland in First T20I on Edinburgh.


பின்னர் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களையே எடுக்க முடிந்தது. அந்த அணியின் லீஸ்க் அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்தார். ஹசன் அலி மற்றும் ஷதாப் கான் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஆட்டநாயகனாக சர்பராஸ் கான் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

முன்னதாக ஸ்காட்லாந்து அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற கையயோடு இந்த தொடரை எதிர்கொண்டது .ஆனால் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி ஸ்காட்லாந்து அணியின் வெற்றி கனவை தகர்த்தது.

பாகிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி இன்று அதே மைதானத்தில் இன்று நடக்க இருக்கிறது. ஸ்காட்லாந்து அணி போட்டியை வென்று தொடரை சமன் செய்யுமா ?






Story first published: Wednesday, June 13, 2018, 18:45 [IST]
Other articles published on Jun 13, 2018
English summary
Pakisthan beat Scotland in First T20I on Edinburgh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X