For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உம்ரான் மாலிக் ஒதுக்கப்பட்டது ஏன்.. தென்னாப்பிரிக்க கேப்டன் செய்த தந்திர வேலை..163கிமீ- வேகம் வீண்

டெல்லி: தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டியில் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

இந்த அணியின் ப்ளேயிங் 11ல் பேட்டிங்கை பொறுத்தவரை அனைவரும் எதிர்பார்த்த வீரர்களே களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனால் பந்துவீச்சில் பெரும் ஏமாற்றமாக உம்ரான் மாலிக் பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ளார். பயிற்சி ஆட்டத்தின் போது 163. 7 கிமீ வேகத்தில் பந்துவீசி ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தினார். எனினும் அவரின் விஷயத்தில் இந்திய அணி ஏமாற்றியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்நிலையில் இதற்கான காரணமும் தெரியவந்துள்ளது. முதல் டி20 போட்டி குறித்து முன்பு பேசியிருந்த தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, உம்ரான் மாலிக்கை சமாளிப்பது தான் எங்களுக்கு கடினம், அவரின் 150கிமீ வேகத்தை எதிர்கொள்ளவது எங்களால் முடியாத ஒன்று, எனினும் முயற்சி செய்வோம் என, தொடர்ந்து உம்ரான் மாலிக் குறித்தே புகழ்ந்து பேசியிருந்தார்.

பவுமாவின் தந்திரம்

பவுமாவின் தந்திரம்

ஆனால் இதில் தான் தந்திரமே உள்ளது. பவுமா கூறியதை போன்று உம்ரான் மாலிக்கின் வேகம் சிறப்பான ஒன்றாக இருந்தாலும், அவரின் லைன் அண்ட் லெந்த் இன்னும் சரியாக அமையவில்லை. வேகத்தை மட்டுமே எப்போதுமே நம்பியிருக்க முடியாது. ஸ்லோவர் பந்துகளும் அவ்வபோது சரியான டைமிங்கில் வீச வேண்டும். அந்தவகையில் உம்ரான் மாலிக் வேகத்தை தாண்டி, மற்ற சில விஷயங்களில் மேம்பட வேண்டியுள்ளது.

முக்கிய ப்ளான்

முக்கிய ப்ளான்

போட்டி நடக்கும் அருண் ஜெட்லி மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் குறைந்த தூரம் கொண்டவை. எனவே லெந்த் சரியில்லாத உம்ரான் மாலிக் வீசினால் அசால்டாக பவுண்டரி அடிக்கலாம். எனவே உம்ரான் குறித்து பயப்படுவது போன்று காட்டினால், நிச்சயம் அவரை அறிமுகப்படுத்துவார்கள் என நினைத்து பவுமா திட்டம் போட்டதாக தெரிகிறது.

கண்டுபிடித்த டிராவிட்

கண்டுபிடித்த டிராவிட்

இதனை புரிந்துக்கொண்ட ராகுல் டிராவிட், 2 நாட்களுக்கு முன்பே உம்ரான் விளையாடமாட்டார் என சூசகமாக கூறிவிட்டார். உம்ரான் வேகமாக வீசினாலும், அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. சீனியர் வீரர்கள் நிறைய பேர் உள்ளனர் என்பதால் பொறுத்திருந்து பார்க்கலாம் எனக்கூறிவிட்டார்.

Story first published: Thursday, June 9, 2022, 21:07 [IST]
Other articles published on Jun 9, 2022
English summary
Umran malik exclusion in India vs south africa 1st t20 ( இந்தியா vs தென்னாப்பிரிக்க முதல் டி20 போட்டி ) தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் உம்ரான் மாலிக் ஒதுக்கப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X