தெ. ஆப்பிரிக்க தொடரில் இந்திய வீரர்கள் பெற்ற மதிப்பெண்கள்..?? இந்திய அணியின் ரிப்போர்ட் கார்டு..!!

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதை பெறுத்து அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கலாம்

“நல்லா பார்த்துக்கோ.. இதுதான் நடந்தது” பூதாகரமான கோலியின் குற்றச்சாட்டு..தென்னாப்பிரிக்கா விளக்கம்! “நல்லா பார்த்துக்கோ.. இதுதான் நடந்தது” பூதாகரமான கோலியின் குற்றச்சாட்டு..தென்னாப்பிரிக்கா விளக்கம்!

முகமது ஷமி

முகமது ஷமி

தென்னாப்பிரிக்க தொடரில் இந்தியா சிறப்பான தொடக்கத்தை அளித்தது. அதற்கு காரணம் முதல் டெஸ்டில் முகமது ஷமியின் சிறந்த பந்துவீச்சு தான். முதல் டெஸ்டில் மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 2வது டெஸ்டிலும், மூன்றாவது டெஸ்டிலும் தலா 3 விக்கெட்டுகளையே வீழ்த்தினார். இதே போன்று பேட்டிங்கிலும் அவர் கை கொடுக்கவில்லை. இதனால் முகமது ஷமி பத்துக்கு 7 மதிப்பெண்களே பெற்றுள்ளார்.

கே.எல். ராகுல்

கே.எல். ராகுல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முழு காரணம் கே.எல், ராகுலின் சதம் தான். இதே போன்று 2வது டெஸ்டிலும் அரைசதம் விளாசிய அவர், 3வது டெஸ்டில் சொதப்பினார். 3 போட்டிகளில் விளையாடி 226 ரன்கள் அடித்துள்ள ராகுல் 10க்கு 7 மதிப்பெண்கள் பெறுகிறார்.

ஷர்துல் தாக்கூர்

ஷர்துல் தாக்கூர்

தென்னாப்பிரிக்க தொடரில் 2வது டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷர்துல் தாக்கூர். பார்டனர்ஷிப்பை உடைக்கும் பணியை ஷர்துல் தாக்கூர் இந்த தொடரில் மேற்கொண்டார். 2வது டெஸ்டில் ஷர்துல் அதிகபட்சமாக 28 ரன்கள் அடித்தாலும், ஒரு ஆல் ரவுண்டராக ஷர்துல் ஜொலிக்கவில்லை. ஆனால் 12 விக்கெட்டுகளை இந்த தொடரில் வீழ்த்தியது மூலம் ஷர்துல் பத்துக்கு 6 மதிப்பெண்களை பெறுகிறார்.

பும்ரா

பும்ரா

தென்னாப்பிரிக்க தொடரில் பும்ரா மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் 2 டெஸ்டில் பும்ரா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் தொடரில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கும். பேட்டிங்கிலும் ரிஷப் பண்டுக்கு கைக் கொடுக்க தவறியதால் பும்ரா பத்துக்கு 6 மதிப்பெண்கள் தான் பெறுகிறார்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். இருப்பினும் 2வது டெஸ்டில் முக்கிய கட்டத்தில் அவர் டக் அவுட்டானது, தொடரில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் ரிஷப் பண்ட் 10க்கு 5 மதிப்பெண்களே பெறுகிறார்.

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலியை நம்பியே இந்திய அணி தென்னாப்பிரிக்க தொடரில் களமிறங்கியது. ஆனால் அவர் இந்த தொடரிலும் ஒரு சதம் கூட விளாசவில்லை. இரண்டாவது டெஸ்டிலும் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் அவர் பத்துக்கு 4 மதிப்பெண்களையே பெறுகிறார்.

3 மதிப்பெண்கள்

3 மதிப்பெண்கள்

இந்திய அணி தோற்றதுக்கு முக்கிய காரணமாக பார்க்க கூடியவர்கள் சீனியர்களான புஜாரா, ரஹானே தான். இருவரும் தலா ஒரு முறை மட்டுமே அரைசதம் அடித்தனர் . முக்கிய கட்டத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து காலை வாரினர். 3 டெஸ்டில் விளையாடி ரஹானே 136 ரன்களும், புஜாரா 124 ரன்களும் மட்டுமே அடித்ததால் இருரும் தலா 3 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Report card of Indian team against south Africa series தெ. ஆப்பிரிக்க தொடரில் இந்திய வீரர்கள் பெற்ற மதிப்பெண்கள்..?? இந்திய அணியின் ரிப்போர்ட் கார்டு..!!
Story first published: Saturday, January 15, 2022, 13:22 [IST]
Other articles published on Jan 15, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X