For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"ஃபார்மில்லை" வங்கதேச தொடரே கடைசி.. ரிஷப் பன்ட் விரைவில் நீக்கப்படுவார்.. முன்னாள் வீரர் கணிப்பு!

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பாக விளையாடும் ரிஷப் பன்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட். தோனியின் ஓய்வுக்கு பின், இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார்.

அதேபோல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் டெஸ்ட் கிரிக்கெட் சதம் விளாசி, முழுமையான பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

ரிஷப் பன்ட் தடுமாற்றம்

ரிஷப் பன்ட் தடுமாற்றம்

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரிஷப் பன்ட், ஒருநாள் மற்றும் டி20 வகை கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக தடுமாறி வருகிறார். இதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் ரிஷப் பன்ட்-க்கு போட்டியாக திகழ்ந்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணிக்கு எதிராக ரிஷப் பன்ட் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.

 ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

இந்த நிலையில் ரிஷப் பன்ட் பேட்டிங் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், ரிஷப் பன்ட்டை அனைவரும் ஸ்பெஷல் வீரராக பார்த்து வந்தோம். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ரிஷப் பன்ட் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்.

விரைவில் நீக்கம்

விரைவில் நீக்கம்

ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பன்ட்-ற்கு அதிகளவில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாய்ப்புகளில் ரிஷப் பன்ட் தன்னை நிரூபிக்க தவறிவிட்டார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், அடுத்த தொடரில் பன்ட்-க்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதிலும் பன்ட் சிறப்பாக விளையாடவில்லை என்றால், அவரின் இடம் பறிபோக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 விமர்சனம்

விமர்சனம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபீல்டர்கள் அருகிலேயே நிறுத்தப்படுவதால், அதிரடியாக விளையாடும் ரிஷப் பன்ட் எளிதாக ரன் சேர்த்துவிடுகிறார் என்பது கடந்த சில காலமாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஃபீல்டர்கள் அனைத்து திசைகளிலும் நிற்பதால், ரன்கள் சேர்க்க திணறுவதாக விமர்சிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 27, 2022, 0:34 [IST]
Other articles published on Nov 27, 2022
English summary
Former India opener Aakash Chopra has criticized Test cricketer Rishabh Pant for not living up to expectations in ODIs and T20Is.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X