ஷர்துல் தாக்கூர் அபார பந்துவீச்சு.. சென்னையில் நியூசியை புரட்டி போட்ட இந்தியா..ருத்துராஜ் பலே ஆட்டம்

சென்னை : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஏ அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Recommended Video

Sanju Samson-ன் Mass Entry! Chepauk Crowd ஆரவாரத்தோடு வரவேற்பு | Aanee's Appeal |

இதில் டெஸ்ட் தொடரை இந்திய ஏ அணி 1க்கு 0 என்ற கணக்கில் வென்ற நிலையில், ஒருநாள் தொடர் இன்று சென்னையில் தொடங்கியது.

சஞ்சு சாம்சன் தலைமையிலான அணியில் ருத்துராஜ், பிரித்வி ஷா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

3 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசம்.. இந்தியா தோல்விக்கு முக்கிய காரணம்.. புள்ளி விவரத்துடன் ஒரு அலசல்3 ஆண்டுகளில் இல்லாத அளவு மோசம்.. இந்தியா தோல்விக்கு முக்கிய காரணம்.. புள்ளி விவரத்துடன் ஒரு அலசல்

துல்லியமான பந்துவீச்சு

துல்லியமான பந்துவீச்சு

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் ஆட்டம் தொடங்கிய சில மணி நேரம் வரை பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்தது. இதனை பயன்படுத்தி கொண்ட இந்திய வீரர்கள், துல்லியமாக பந்துவீச, அதனை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். சாட் போவ்ஸ் 10 ரன்களிலும், ரச்சின் ரவிந்திர 10 ரன்களிலும், டேன் கிளவர் 4 ரன்களிலும் , கார்டர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

167 ரன்களுக்கு ஆல்அவுட்

167 ரன்களுக்கு ஆல்அவுட்

இதனால் நியூசிலாந்து ஏ அணி 27 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, நியூசிலாந்து வீரர் மைக்கேல் ரிப்பான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 61 ரன்களும், ஜோ வாக்கர் 36 ரன்களும் எடுக்க, நியூசிலாந்து ஏ அணி 40.2 வது ஓவரில் 167 ரன்களில் சுருண்டது. ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும்,குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ருத்துராஜ் கெய்க்வாட்

ருத்துராஜ் கெய்க்வாட்

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 17 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் வழக்கம் போல் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். 54 பந்துகளை எதிர்கொண்ட அவர் 41 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும்.

இந்தியா ஏ வெற்றி

இந்தியா ஏ வெற்றி

இதே போன்று அனுபவ ஐபிஎல் வீரர் ராகுல் திரிபாதியும் அதிரடியாக விளையாடி 31 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து கேப்டன் சஞ்சு சாம்சன், ரஜத் பட்டிதார் ஜோடி இணைந்து எளிதாக ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்தனர். இதில் பட்டிதார் 45 ரன்களும், சாம்சன் 3 சிக்சர்கள் உள்பட 29 ரன்களும் விளாச இந்திய ஏ அணி 31.5வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Shardul Thakur shines with ball as Ind a beat NZ a by 7 wickets ஷர்துல் தாக்கூர் அபார பந்துவீச்சு.. சென்னையில் நியூசியை புரட்டி போட்ட இந்தியா..ருத்துராஜ் பலே ஆட்டம்
Story first published: Thursday, September 22, 2022, 16:52 [IST]
Other articles published on Sep 22, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X