For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நியூசி.க்கு எதிராக சுப்மான் கில் சதம்.. கோலி, ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு.. புதிய நாயகனா கில் ?

ஐதராபாத் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மான் கில் தொடர்ந்து 2வது முறையாக சதம் விளாசியுள்ளார்.

அண்டர் 19 கிரிக்கெட் மூலம் பிரபலமான சுப்மான் கில், விராட் கோலி பயணித்த பாதையிலேயே அவரும் வருகிறார். இதனால் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நாயகனாக சுப்மான் கில் வர வாய்ப்பு உள்ளது.

2022ஆம் ஆண்டு தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்ட சுப்மான் கில், ஒருநாள் போட்டியில் அந்த ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

கடைசி நேரத்தில் விலகிய வீரர்.. விக்கெட் கீப்பருக்கு பஞ்சம்.. முதல் ODIக்கான இந்திய ப்ளேயிங் 11 இதோ! கடைசி நேரத்தில் விலகிய வீரர்.. விக்கெட் கீப்பருக்கு பஞ்சம்.. முதல் ODIக்கான இந்திய ப்ளேயிங் 11 இதோ!

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

தற்போது நடப்பாண்டில் ஏற்கனவே இலங்கைக்கு எதிராக 3வது டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில் சதம் விளாசிய நிலையில் இரண்டு நாள் இடைவெளியில் மீண்டம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதே போன்ற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் ரோகித் சர்மா வழககம் போல் பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

எனினும் ரோகித் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 8 ரன்களில் மிட்செல் சாண்ட்னர் பந்தில் போல்ட் ஆனார்.இரட்டை சதம் அடித்த பிறகு ஒருநாள் போட்டிக்கு திரும்பிய இஷான் கிஷன் 5 ரன்களில் வெளியேறினார்.

சுப்மான் கில் சதம்

சுப்மான் கில் சதம்

ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும், மறுமுனையில் சுப்மான் கில் கவுண்டர் அட்டாக் இன்னிங்சை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இந்திய அணி மீது அழுத்தம் ஏற்படாத வகையில் சுப்மான் கில் பார்த்து கொண்டார். இதன் மூலம் 88 பந்துகளில் சுப்மான் கில் சதம் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

 கோலி சாதனை முறியடிப்பு

கோலி சாதனை முறியடிப்பு

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்சில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மான் கில் படைத்தார். இதற்கு முன்பு விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் 24வது இன்னிங்சில் கடந்ததே முந்தைய சாதனையாக கருதப்பட்டது. உலக அளவில் பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் சமான் 18 இன்னிங்சிலும், இமாம் 19 இன்னிங்சிலும் கடந்ததே சாதனையாக கருதப்படுகிறது.

Story first published: Wednesday, January 18, 2023, 16:37 [IST]
Other articles published on Jan 18, 2023
English summary
Shubman gill scored back to back odi century and breaks kohli record நியூசி.க்கு எதிராக சுப்மான் கில் சதம்.. கோலி, ஷிகர் தவான் சாதனை முறியடிப்பு.. புதிய நாயகனா கில் ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X