For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன் மாதிரி விளையாடுறாங்களே... ஆச்சரியப்படுகிறார் அப்துல் காதிர்!

டெல்லி: சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா வெல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து ஜாம்பவான் அப்துல் காதிர் கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா முதல் அணியாக அரை இறுதிக்குள் ஏற்கனவே நுழைந்து விட்டது.

பி பிரிவில் அரை இறுதிக்குள் நுழையும் 2வது அணி யார் என்பது இன்று தெரியும். இந்தியாவுக்கு இன்னும் ஒரு லீக் போட்டி உள்ளது. அது பாகிஸ்தானுடன். இந்தப் போட்டியின் வெற்றி, தோல்வி இந்தியாவைப் பாதிக்காது.

இந்த நிலையில் இப்போட்டியில் இந்தியா வெல்லவே வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறியுள்ளார் அப்துல் காதிர். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது....

பேட்டிங் பக்கா...

பேட்டிங் பக்கா...

இந்தியாவின் பேட்டிங் பக்காவாக இருக்கிறது.வலிமையாக இருக்கிறது. பாகிஸ்தானை விட சிறப்பாக உள்ளனர்.

சாம்பியன் மாதிரி விளையாடுறாங்களே...

சாம்பியன் மாதிரி விளையாடுறாங்களே...

இந்திய வீரர்கள் சாம்பியன் போல விளையாடுகிறார்கள். இறுதிப் போட்டிக்கும் இந்தியா போகும் என்றே கருதுகிறேன்.

சச்சின் இல்லாமல் சாதிப்பது பெரிய விஷயம்

சச்சின் இல்லாமல் சாதிப்பது பெரிய விஷயம்

சச்சின், டிராவிட், ஷேவாக், கம்பீர் என முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்தியா சிறப்பாக ஆடுவது ஆச்சரியமானது, முக்கியமானது. பேட்டிங்தான் இந்தியாவின் பெரும் பலமாகும்.

சர்வசாதாரணமாக 300 அடிக்கிறார்கள்

சர்வசாதாரணமாக 300 அடிக்கிறார்கள்

இந்திய வீரர்கள் இங்கிலாந்து சூழலில் சர்வ சாதாரணமாக 300 ரன்களை அடிப்பது பெரிய விஷயம். இந்தியா வீரர்கள் சரளமாக விளையாடுகிறார்கள்.

2 போட்டிகளிலும் பிரில்லியன்ட்

2 போட்டிகளிலும் பிரில்லியன்ட்

முதல் இரு லீக் போட்டிகளிலும் இந்தியா பிரமாதமாக ஆடியது. ஷிகர் தவானும், ரவீந்திர ஜடேஜாவும் இந்தியாவின் முக்கியமான வீரர்களாக மாறியுள்ளனர்.

பாகிஸ்தானை விட இந்தியா பெட்டர்

பாகிஸ்தானை விட இந்தியா பெட்டர்

தற்போதைய நிலையில் பேட்டிங்கைப் பொறுத்தவரை பாகிஸ்தானை விட இந்தியா சிறப்பாக உள்ளது. ஆனால் பாகிஸ்தான் கடைசி நேரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

பந்து வீச்சில் பாகிஸ்தான்தான் பெஸ்ட்

பந்து வீச்சில் பாகிஸ்தான்தான் பெஸ்ட்

பந்து வீச்சில் பாகிஸ்தான் சிறப்பாக இருப்பதை மறந்து விடக் கூடாது என்றார் காதிர்.

Story first published: Friday, June 14, 2013, 15:35 [IST]
Other articles published on Jun 14, 2013
English summary
India's formidable batting line-up, which has new match winners, gives them an upper hand against Pakistan in the "final before final" of the Champions Trophy, legendary leg-spinner Abdul Qadir has said. India have already made it to the semifinals and Pakistan are out of contention, having lost their first two matches. The result of the Saturday's high-voltage match will have no bearing on their fortunes in the tournament. "India are playing like a champion and I think they will play the final. Their strength lies in their batting. Despite the absence of Virender Sehwag, Rahul Dravid, Sachin Tendulkar and Gautam Gambhir in their line up, they are scoring 300 plus runs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X