For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 ஆண்டுகளில் முதல் முறை சம்பவம்.. "இவரை உலககோப்பைக்கு அழைச்சிட்டு போங்க".. கவாஸ்கர், ஸ்மித் கருத்து

கட்டாக்: தென்னாப்பிரிக்க தொடருக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி சொதப்பினாலும் ஒரே ஒரு நல்ல விசயம் மட்டும் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இந்த நட்சத்திரம் இடம்பெற்றே ஆக வேண்டும் என்று கவாஸ்கர், கிரேம் ஸ்மித் கூறி இருந்தார்.

அவர் வேறு யாரும் இல்லை. நம் புவனேஸ்வர் குமார் தான். புவனேஸ்வர் குமார் 4 ஓவரில் 13 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

உம்ரான் மாலிக் ஒதுக்கப்பட்டது ஏன்.. தென்னாப்பிரிக்க கேப்டன் செய்த தந்திர வேலை..163கிமீ- வேகம் வீண் உம்ரான் மாலிக் ஒதுக்கப்பட்டது ஏன்.. தென்னாப்பிரிக்க கேப்டன் செய்த தந்திர வேலை..163கிமீ- வேகம் வீண்

3 விக்கெட்

3 விக்கெட்

புது பந்தை பயன்படுத்திய புவனேஸ்வர் குமார் முதல் ஓவரிலேயே ஹெண்டரிக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதே போன்று அவருடைய 2வது ஓவரில் நக்கில் பந்தை வீசி பிரிட்டோரியஸ் விக்கெட்டை கைப்பற்றினார். இதே போன்று பவர்பிளேவின் கடைசி ஓவரில் வெண்டர்டுசனை வீழ்த்தினார். இதன் மூலம் பவர் பிளேவில் 3 ஓவரில் 10 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமார் வீழ்த்தி இருக்கிறார்.

கிரேம் ஸ்மித் பாராட்டு

கிரேம் ஸ்மித் பாராட்டு

பவர்பிளேவில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை இதற்கு முன்பு 2012ஆம் ஆண்டு தான் வீழ்த்தி இருக்கிறார். இது குறித்து பேசிய கிரேம் ஸ்மிம், புவனேஸ்வர் குமார் புத்திசாலித்தனமாக பந்துவீசினார். ஹெண்டரிக்ஸ் இன்ஸ்ஹிங் பந்தை எதிர்கொள்வதில் திணறுவார் என முன்பே அறிந்து அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

செம ஸ்விங்

செம ஸ்விங்

இதே போன்று நக்கல் பந்தை வைத்து பிரிட்டோரியஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இது சிறந்த பவுலிங். தீட்டிய திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார் புவனேஸ்வர் குமார் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய கவாஸ்கர், வெள்ளை நிற பந்து இப்படி ஸ்விங் ஆகாத. ஆனால் அவர் அந்த திறமையை வளர்த்துள்ளார்.

Recommended Video

IND vs SA 3rd T20-யின் Predicted Playing 11 என்ன? Aanee's Appeal | *Cricket | OneIndia Tamil
பெரிய தாக்கம்

பெரிய தாக்கம்

ரிஷப் பண்ட் கேப்டன்ஷியை இதற்காகவே பாராட்டுகிறேன். பந்து பழசு ஆகிவிட்டது என்றால் பந்து ஸ்விங் ஆகாது என்பதை உணர்ந்த அவர் தொடக்கத்திலேயே 3 ஓவரை வீச வைத்துவிட்டார். அதன் பிறகு புவனேஸ்வர் குமார் பந்துவீசி இருந்தால், இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படத்தி இருக்க முடியாது. ஆஸதிரேலியாவிலும் இது போல் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். இதனால் டி20 உலகக் கோப்பை தொடரில் புவனேஸ்வர் குமார் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறினார்.

Story first published: Monday, June 13, 2022, 20:33 [IST]
Other articles published on Jun 13, 2022
English summary
Sunil Gavaskar and Greame smith hails the veteran indian bowler 10 ஆண்டுகளில் முதல் முறை சம்பவம்.. "இவரை உலககோப்பைக்கு அழைச்சிட்டு போங்க".. கவாஸ்கர், ஸ்மித் கருத்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X