For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது ரகசியம்.. சொல்ல மாட்டோம்.. ரவி சாஸ்திரியின் தேர்வுக்கு இன்னொரு காரணம்.. கபில் தேவ் மழுப்பல்!

இந்திய அணியின் பயிற்சியாளாராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு பின் முக்கிய காரணம் இருக்கிறது, ஆனால் அது ரகசியம் என்று கபில் தேவ் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

ரவி சாஸ்திரியின் தேர்வுக்கு இன்னொரு காரணம்.. கபில் தேவ் மழுப்பல்!

டெல்லி: இந்திய அணியின் பயிற்சியாளாராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு பின் முக்கிய காரணம் இருக்கிறது, ஆனால் அது ரகசியம் என்று கபில் தேவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் மேலும் இரண்டு வருடங்களுக்கு அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க உள்ளார்.

பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையில், வேறு முன்னாள் வீரர்கள் யாராவது தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021ல்தான் இவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து மாற்றப்படுவார்.

ஒரு ட்விஸ்ட்டும் வைக்காத கபில் தேவ்.. மீண்டும் அவரே தான் பயிற்சியாளர்.. கடுப்பில் ரசிகர்கள்! ஒரு ட்விஸ்ட்டும் வைக்காத கபில் தேவ்.. மீண்டும் அவரே தான் பயிற்சியாளர்.. கடுப்பில் ரசிகர்கள்!

தேர்வு கமிட்டி

தேர்வு கமிட்டி

பயிற்சியாளரை தேர்வு செய்ய புதிய தேர்வு கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு இருந்தது. அதன்படி முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், முன்னாள் இந்திய வீரர் அனுஷ்மான் கேக்வாட், முன்னாள் பெண்கள் அணி கேப்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்ய்துள்ளனர்.

என்ன பேட்டி

என்ன பேட்டி

இந்த நிலையில் இது தொடர்பாக தேர்வு குழுவின் தலைவர் கபில் தேவ் பேட்டி அளித்தார். அதில், ரவி சாஸ்திரிதான் பயிற்சியாளர். எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். எல்லோரும் எதிர்பார்த்ததுதான் இது. இது தொடர்பாக நாங்கள் 6 மணி நேரமாக தீவிர ஆலோசனை செய்தோம். நாங்கள் எல்லோரும் தனி தனியாக முடிவு எடுத்தோம்.

தனியாக மார்க்

தனியாக மார்க்

நாங்கள் எல்லோரும் தனி தனியாக மார்க் கொடுத்தோம். மற்றவர்களிடம் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. விண்ணப்பங்களை பெற்று கடைசியில் தேர்வான 5 பேருக்கும் நாங்கள் தனி தனியாக மார்க் கொடுத்தோம். அதை வைத்து கடைசியில் ஒரு மனதாக ரவி சாஸ்திரியை பயிற்சியாளரை தேர்வு செய்து இருக்கிறோம்.

யார் வந்தனர்

யார் வந்தனர்

நாங்கள் கொடுத்த மார்க்கின் அடிப்படையில் முதல் இடத்தில் ரவி சாஸ்திரி இருந்தார். இரண்டாவது இடத்தில் மைக் ஹேசன் இருந்தார். மூன்றாவது இடத்தில் டாம் மூடி இருந்தார். 100 மதிப்பெண்ணிற்கு யார் எவ்வளவு புள்ளிகள் எடுக்கிறார்கள் என்று போட்டி வைத்து தேர்வு செய்தோம்.

கடும் போட்டி

கடும் போட்டி

ஆனால் விண்ணப்பம் செய்தவர்களுக்கு இடையில் மிக கடுமையான போட்டி இருந்தது. எல்லோரும் மிக அதிகமான புள்ளிகள் பெற்று இருந்தனர். அவர்களின் திறமை, அனுபவம், விளையாட்டு குறித்த அறிவு இதுதான் தேர்வுக்கு முக்கிய காரணியாக இருந்தது.

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரிக்கு இந்திய அணி குறித்து நன்றாக தெரியும். அவருக்கு இந்திய அணியின் பிரச்சனை குறித்தும் தெரியும். அவர் வீரர்களுடன் நெருக்கமாக இருக்கிறார், அதனால் அவரை தேர்வு செய்தோம். ஆனால் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டதற்கு வேறு சில காரணங்களும் உள்ளது.. அதை சொல்ல முடியாது. அது பிசிசிஐ ரகசியம் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

Story first published: Friday, August 16, 2019, 19:08 [IST]
Other articles published on Aug 16, 2019
English summary
That is confidential, tells Kapil Dev on What made Ravi Sastri become the coach again for team India?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X