அவரு யாருன்னு தெரியுமா..? டோணியை குறை சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை: கோஹ்லி கோபம்

Posted By:

திருவனந்தபுரம்: இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணிக்கு, கேப்டன் விராட் கோஹ்லி முழு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில், டோணி மெதுவாக ஆடியதுதான் இந்திய தோல்விக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் திருவனந்தபுரம் டி20 போட்டியில் கடைசி நேரத்தில் டோணி இறங்கினார். ஆனால் ஒரு பந்தையும் சந்திக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

பாண்ட்யா கூடத்தான் அடிக்கவில்லை

பாண்ட்யா கூடத்தான் அடிக்கவில்லை

போட்டிக்கு பிறகு டோணி மீதான விமர்சனங்கள் குறித்து கேப்டன் கோஹ்லி கூறுகையில், ஒரு வீரர் களமிறங்கும் நேரத்தை கணக்கில் எடுக்க வேண்டும். அந்த இடத்தில் களமிறங்கும்போது உடனே ரன் எடுக்க முடியாது. அப்போட்டியில் பாண்ட்யா கூடத்தான் ரன் எடுக்கவில்லை. ஆனால், ஏன் எப்போதுமே டோணியை நோக்கி கை நீட்டுகிறீர்கள்.

பிட்ச் சரியில்லை

பிட்ச் சரியில்லை

ஒரு வீரரை மட்டுமே குறி வைப்பது சரியான நடைமுறை இல்லை. டோணி களமிறங்கியபோது, ஓவருக்கு சுமார் 9 ரன்கள் தேவைப்பட்டது. பிட்ச்சும் கூட, முதல் இன்னிங்சில் நியூசி. ஆடியபோது இருந்ததை போல பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லை. ஏற்கனவே களத்தில் நிற்பவர்களால் பந்தை கணித்து அடித்து ஆட முடியும். அதைத்தான் நான் செய்தேன். புதிதாக களத்திற்குள் வரும் பேட்ஸ்மேன்கள் முதல் பந்திலேயே அதை செய்ய முடியாது.

டோணி சிறப்பான வீரர்

டோணி சிறப்பான வீரர்

பிட்ச் தன்மை, வீரர் களமிறங்கும் இடம், தேவைப்பட்ட ரன் ரேட் இவை அனைத்தையுமே கணக்கில் வைத்துதான் ஒரு வீரரின் செயல்பாட்டை கணிக்க வேண்டும். டோணி இன்னும் ஃபிட்னசுடன்தான் உள்ளார். அவரால் அணிக்கு சிறந்த பங்களிப்பை அளிக்க முடிகிறது. ஆஸி. இலங்கைக்கு எதிரான தொடர்களில் டோணி சிறப்பாக செயல்பட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து வைத்திருப்பார்கள். ஆனால் களத்தில் நிற்கும் விளையாட்டு வீரருக்குத்தான் அங்கு என்ன நிலை என்று தெரியும்.

யாருக்கும் அதிகாரம் இல்லை

யாருக்கும் அதிகாரம் இல்லை

டெல்லி போட்டியில் முதல் பந்திலேயே டோணி சிக்சர் விளாசினார். போட்டி முடிந்த பிறகு 5 முறை அந்த காட்சி பெரிய ஸ்கிரீனில் காட்டப்பட்டது. அடுத்த போட்டியில் மெதுவாக ஆடினார் என்பதால் எல்லோரும் திடீரென டோணி மீது பாய்வது சரியில்லை. மக்களுக்கு பொறுமை தேவை என நினைக்கிறேன். டோணி மிகவும் புத்திசாலி. களத்தில் இப்போது என்ன நிலை என்பதை கணித்து ஆடக்கூடியவர். எனவே வேறு யாரும் அவரது செயல்பாட்டை குறைசொல்லும் அதிகாரம் உள்ளவர்கள் கிடையாது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

சிறப்பாக செயல்பட்ட டோணி

சிறப்பாக செயல்பட்ட டோணி

டோணிக்கு நேற்று பந்தை எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை என்றபோதிலும், ஃபீல்டிங்கின்போது முக்கியமான நேரத்தில் மின்னல் வேகத்தில் நியூசி. பேட்ஸ்மேனை ரன்அவுட் செய்தார். பும்ரா வீசிய பந்து மிக அதிக அளவுக்கு வைடாக சென்றபோது, அதை பாய்ந்து தடுத்து தனது நெஞ்சில் பந்தால் காயம் ஏற்பட்டதையும் டோணி கண்டுகொள்ளாமல் 4 ரன்களை மிச்சப்படுத்தினார். இவையெல்லாம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தன.

Story first published: Wednesday, November 8, 2017, 13:05 [IST]
Other articles published on Nov 8, 2017
Please Wait while comments are loading...