For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கொரோனாவுக்கு ஆப்பிரிக்க கால்பந்து உலகில் முதல் பலி.. சோமாலியா மாஜி வீரர் மரணம்

லண்டன் : கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த வாரத்தில் பாதிக்கப்பட்டிருந்த சோமாலியா நாட்டை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் அப்துல்காதிர் முகமது பாரா உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் சர்வதேச அளவில் ஆப்ரிக்க கால்பந்து உலகின் முதல் வீரர் உயிரிழந்துள்ளதாக ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு மற்றும் சோமாலி கால்பந்து பெடரேஷன் கூட்டாக அறிவித்துள்ளது.

Former African footballer Mohamed Farah dies due to COVID-19

59 வயதான முகமது பாரா, சோமாலியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆலோசகராக இருந்துவந்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆப்ரிக்க கால்பந்து உலகம் தன்னுடைய முதல் உயிர்பலியை கொடுத்துள்ளது. முன்னாள் கால்பந்தாட்ட வீரரும் சோமாலியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆலோசகராகவும் இருந்துவந்த அப்துல்காதிர் முகமது பாரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 59 வயதான அப்துல்காதிர், சிகிச்சை பலனின்றி இன்றி உயிழந்துள்ளதாக ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு மற்றும் சோமாலி கால்பந்து பெடரேஷன் அறிவித்துள்ளது. வடமேற்கு லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

கடந்த 1961ல் சோமாலியாவின் மோகாடிசுவில் பிறந்த முகமது பாரா, 1980களில் பத்ரூல்கா கால்பந்தாட்ட கிளப்பில் இணைந்து சிறப்பாக விளையாடியவர். இந்நிலையில் ஆப்பிரிக்க கால்பந்தாட்ட உலகத்தின் முதல் உயிர்ப்பலி இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 21,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், விளையாட்டு வீரர்களும் உயிரிழந்து வருகின்றனர்.

Story first published: Thursday, March 26, 2020, 17:14 [IST]
Other articles published on Mar 26, 2020
English summary
Former African footballer Mohamed Farah dies due to Coronavirus
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X