For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மெஸ்ஸி உலககோப்பையை வென்றாலும், ரொனால்டோ தான் சிறந்த வீரர்.. 5 காரணங்கள் இதோ?

கத்தார்: உலககோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றாலும், மெஸ்ஸி தான் சிறந்த கால்பந்து வீரர் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மெஸ்ஸி சிறந்த வீரர் தான். ஆனால் அதற்காக ரொனால்டோ எந்த விதத்திலும் மெஸ்ஸியை விட குறைந்து போகவில்லை. உலககோப்பையை வென்று விட்ட ஒரே காரணத்தால் அவரை விட இவர் சிறந்தவர் என்று கூறுவது மிகவும் தவறான ஒன்று.

முதலில், கால்பந்து என்பது தனி நபர் விளையாட்டு அல்ல. அது ஒரு அணியாக விளையாக கூடியது. அடுகளத்தில் 11 பேரும் சரியாக விளையாடினால் தான் கோப்பையை வெல்ல முடியும்.

கால்பந்து உலகை ஆளப்போகும் அரசன்.. போர்கண்ட சிங்கமாக தாக்கும் கிலியன் எம்பாப்பே.. யார் இவர்? கால்பந்து உலகை ஆளப்போகும் அரசன்.. போர்கண்ட சிங்கமாக தாக்கும் கிலியன் எம்பாப்பே.. யார் இவர்?

நியாயம் ஆகுமா?

நியாயம் ஆகுமா?

அப்படி இருக்க அர்ஜென்டினாவில் டி மரியா, அல்வாரெஸ் போன்ற வீரர்களின் தயவால் தான் அர்ஜென்டினா கோப்பையை வென்றது. எனவே உலககோப்பையை காரணம் காட்டி, அதனை வென்றதால் இவர் சிறந்த வீரர் என்று சொல்வது தவறு. எடுத்துகாட்டாக, இந்திய கிரிக்கெட் அணியில் டிராவிட், கங்குலி போன்றவர்கள் சிறந்த வீரர்கள். ஆனால் அவர்கள் உலககோப்பையை வாங்கவில்லை யூசுப் பதான் தான் வாங்கி இருக்கிறார். இதனால் யூசுப் பதான் தான் சிறந்த வீரர் என்று சொல்வது நியாயம் ஆகுமா?

 முதலிடத்தில் ரொனால்டோ

முதலிடத்தில் ரொனால்டோ

தனிப்பட்ட முறையில் மெஸ்ஸியை விட சர்வதேச அளவில் அதிக கோல், கிளப் அளவில் அதிக கோல், சிறந்த கால்பந்து வீரர் போன்ற பல விருதுகளை சொல்லப் போனால் முதல் இடத்தில் இன்னும் ரொனால்டோ தான் இருக்கிறார். இல்லை சச்சினை விட பாண்டிங் தான் அதிக உலக கோப்பையை வாங்கி இருக்கிறார் என்று சொல்லி பாண்டிங்கையா ஆல் டைம் சிறந்த வீரர் என்று கூறுகிறோம்.

தனித்துவ வீரர்

தனித்துவ வீரர்

பதற்றமான நேரம் என்பது, போட்டியின் கடைசி 10 நிமிடங்கள் ஆகும். அந்த நேரத்தில் , அதாவது கடைசி 10 நிமிடங்களில் ஒவ்வொரு நிமிடத்திலும் கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை ரொனால்டோ மட்டும் தான் படைத்திருக்கிறார். மெஸ்ஸி மற்ற வீரர்களுக்கு கோல் அடிக்க வாய்ப்பு தருவார். ஆனால், ரொனால்டோ சுயநலமான வீரர் என்ற புகார் கூறப்படும்.

சுயநலமானவரா ரொனால்டோ?

சுயநலமானவரா ரொனால்டோ?

முதலில் கோலுக்கு அசிஸ்ட் செய்ய வேண்டும் என்றால், அங்கு ஒரு திறமையான வீரர் இருக்க வேண்டும் அல்லவா? அது ரொனால்டோ விசயத்தில் பெரும்பாலும் நடந்தது இல்லை. மெஸ்ஸி பல ஸ்டார் வீரர்கள் அடங்கிய அணியில் இருந்திருக்கிறார். ஆனால் ரொனால்டோ இடம்பெற்ற அணி தான் ஸ்டார் அணியாக விளங்கி இருக்கிறது. சரி, அப்படி என்றால் ரொனால்டோ அசிஸ்ட் செய்ததே இல்லையா என்று கேட்டால், 266 முறை அசிஸ்ட் செய்து இருக்கிறார். அதாவது டாப் 5வது இடம்.

உண்மையான ஹீரோ

உண்மையான ஹீரோ

கால்பந்தை தாண்டி மெஸ்ஸி எந்த பெரிய விவகாரத்திற்கும் குரல் கொடுத்தது இல்லை. ஆனால் ரசிகர்களிடம் அன்பு காட்டுவது, எளியவர்களுக்கு குரல் தருவது, விவசாயிகளுக்காக குரல் கொடுப்பது, இளம் வீரர்களுக்கு உதவுவது, மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பார்ப்பது என்று களத்தையும் தாண்டியும் ஒரு ஹீரோவாகவே ரொனால்டோ திகழ்ந்து இருக்கிறார்.

ரொனால்டோவின் சம்பவங்கள்

ரொனால்டோவின் சம்பவங்கள்

கார்ப்ரேட் ஆதிக்கம் நிறைந்த இந்த உலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெற்கு கோக்ககோலா, தண்ணீர் வையுங்கள் என்று ரொனால்டோ செய்த சம்பவம் அதற்கு சிறிய உதாரணம். ஆனால் இதை எல்லாம் மெஸ்ஸியிடம் கனவிலும் எதிர்பார்க்க முடியாது. ரொனால்டோ சுயமரியாதைக்காரர். தனக்கு அவமரியாதை நிகழ்ந்தது, தவறு நடக்கிறது என்று தெரிந்தால் உடனே அணியை விட்டு வெளியேறிவிடுவார். உலககோப்பையில் கூட தனது அணியின் நிர்வாகத்தால் வெளியே அமர வைக்கப்பட்டு அரசியலை சந்தித்தவர் ரொனால்டோ.

ரொனால்டோ கிங்

ரொனால்டோ கிங்

ரொனால்டோ, எதிரணி வீரர்களையும், அணியில் கூடவே அரசியல் செய்யும் வீரர்களையும் சேர்த்து சமாளிக்க வேண்டும். ஆனால் மெஸ்ஸியோ, நீங்கள் ஊதியத்தை குறைத்தாலும் பரவாயில்லை, பார்சிலோனா அணியில் தான் இருப்பேன் என்று கூறியவர். கால்பந்து உலகில் மெஸ்ஸி உண்மையிலேயே மதிக்க கூடிய வீரர் தான். அதற்காக ரொனால்டோவை ஏளனம் செய்வது தவறு. ஏனென்றால் கால்பந்தில் ரொனால்டோ தனி நபராக படைத்த சாதனை அருகே இன்னும் மெஸ்ஸி வரவில்லை. மெஸ்ஸி GOAT ஆக இருந்தால், அந்த விளையாட்டின் கிங் CR 7 தான்.

Story first published: Tuesday, December 20, 2022, 18:27 [IST]
Other articles published on Dec 20, 2022
English summary
Why cristiano ronaldo is still greatest player despite messi having the world cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X