மகளிர் ஹாக்கி அணிக்கு இரண்டாவது வெற்றி

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

சியோல்: தென் கொரியாவுக்கு எதிரான 5 போட்டித் தொடரின் முதல் போட்டியில் 1-0 என்று வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி, இரண்டாவது போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி, 5 போட்டித் தொடரில் விளையாட தென் கொரியா சென்றுள்ளது. முதல் போட்டியில், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

Women hockey team win

நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கி்ல் வென்று, 2-0 என முன்னிலை பெற்றது.

முதல் போட்டியானது, 26 வயதாகும் இந்திய அணியின் கேப்டன் ரீது ராணியின் 200வது சர்வதேசப் போட்டியாகும். மேலும் மற்றொரு வீராங்கனையான மோனிகாவுக்கு, 100வது போட்டியாக அமைந்தது.

நேற்று நடந்த இரண்டாவது போட்டி, ஒரிசாவைச் சேர்ந்த லிலிமா மின்சுக்கு, 100வது சர்வதேசப் போட்டியாகும்.

2011ல் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கிய 23 வயதாகும் மின்ஸ், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் விளையாடினார்.

Story first published: Wednesday, March 7, 2018, 17:01 [IST]
Other articles published on Mar 7, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற