Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரியோ ஒலிம்பிக் 2016: 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல்.. இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம் !

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டேலா மற்றும் அயோனிகா பால் ஆகியோரின் பதக்க கனவு தகர்ந்தது.

பிரேசிலின் டி ஜெனிரோவில் 31-வது ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் அபூர்வி அயோனிகா மற்றும் பால்சண்டேலா ஆகியோர் பங்கேற்றனர்.

Rio Olympics Shooting: India's Apurvi Chandela, Ayonika Paul crash out

51 பேர் கலந்து கொண்ட தகுதிச் சுற்றில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீராங்கனைகளும் நான்கு முறை சுட வேண்டும். இதில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள்.

அதன்படி நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டேலா 411.6 புள்ளிகள் பெற்று 34-வது இடத்தையும், அயோனிகா பால் 407.0 புள்ளிகள் பெற்று 43-வது இடத்தையும் பிடித்தனர்.

சீன வீராங்கனை லீ டு 420.7 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்தார். இது ஒலிம்பிக் சாதனையாகும். ஜெர்மனி வீராங்கனை 420.3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும், ஈரான் வீராங்கனை 417.8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர். ரஷ்யா, அமெரிக்கா (2), குரோஷியா, சீனா வீராங்கனைகள் முறையே 4-வது இடம் முதல் 8-வது இடங்களை பிடித்தனர்.

தகுதிச் சுற்றோடு வெளியேறியதால் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் சுற்றில் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது.

Story first published: Saturday, August 6, 2016, 20:19 [IST]
Other articles published on Aug 6, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+