For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரம்பிச்சுட்டாங்கய்யா அக்கப்போர..! இந்திய-ஆஸி. வீரர்கள் மைதானத்தில் ஆக்ரோஷ வாய்ச்சண்டை!

By Veera Kumar

அடிலெய்ட்: இத்தனை நாட்களாக அமைதியாக போய்க் கொண்டிருந்த இந்தியா-ஆஸி. நடுவேயான டெஸ்ட் போட்டியில் இன்று ஆக்ரோஷம் தொற்றிக் கொண்டது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும், இந்திய வீரர்களும் ஆக்ரோஷமாக வார்த்தைகளை உதிர்த்த சம்பவம் அடிலெய்டில் இன்று நடந்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் வார்னர், இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

நோபால்

நோபால்

ஆனால் மூன்றாவது நடுவரோ, ஆரோன் வீசியது நோ-பால் என்று அறிவித்தார். இதையடுத்து வார்னர் மீண்டும் களத்துக்கு வந்தார். அப்போது, ஆரோனை பார்த்து 'கமான்... கமான்' என்று கூறினார் வார்னர். வாட்சன் அருகே நின்றிருந்த இந்திய பேட்ஸ்மேன் ஷிகர் தவானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. வார்னரை பார்த்து ஏதோ சொல்லப்போக, பதிலுக்கு வார்னரும் பேச இருவரும் கைகளை நீட்டி ஆக்ரோஷமாக சண்டை போட்டுக் கொண்டனர்.

கோஹ்லி சமாதானம்

கோஹ்லி சமாதானம்

இதனிடையே மறுமுனையில் இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் வாட்சனும், வார்னுக்கு ஆதரவாக 'குழாயடி' சண்டையில் இறங்கினார். இதைப்பார்த்ததும் ஓடிச் சென்ற இந்திய கேப்டன் கோஹ்லி தமது வீரர்களை அமைதி காக்க கேட்டுக் கொண்டார். இதன்பிறகு ஆட்டம் தொடர்ந்தது.

ஆரோன் ஆக்ரோஷம்

ஆரோன் ஆக்ரோஷம்

ஆனால் ஆரோன் தனது கோபத்தை வாட்சன் மீது காண்பித்தார். வாட்சனுக்கு அவர் வீசிய அதிவேக பவுன்சரால் பயந்து போன வாட்சன் குனிந்து தப்ப முயன்றபோது வாட்சனின் கைகளில் பந்து பட்டு ஓடியது. இதனால் மைதானத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

கோஹ்லியும் தகராறு

கோஹ்லியும் தகராறு

இன்றைய நேர ஆட்டம் முடியப்போகும் நேரத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீம் ஸ்மித்திடம், விராட் கோஹ்லி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் நடந்தது. பிற வீரர்களை சமாதானப்படுத்திய கோஹ்லிக்கும் ஆஸி. வீரர்கள் அட்டகாசத்தை பொறுக்க முடியவில்லை போலும்.

அடக்கம் காட்டிய ஆஸி. வீரர்கள்

அடக்கம் காட்டிய ஆஸி. வீரர்கள்

பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து பட்டு உயிரிழந்த நிலையில் இந்திய-ஆஸ்திரேலிய வீரர்கள் அணுகுமுறையில் பெரும் மாற்றம் தென்பட்டது. இந்தியா பேட்டிங் செய்தபோது ஜான்சன் வீசிய பந்து கோஹ்லி ஹெல்மெட்டில் பட்டது. அப்போது ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியே கோஹ்லியை சூழ்ந்து நின்று நலம் விசாரித்தது.

நாளை தொடரும்....

நாளை தொடரும்....

பிலிப் ஹியூக்ஸ் இறுதி சடங்கில் கோஹ்லி, ரோகித் ஷர்மா போன்றோர் கலந்து கொண்டு பரஸ்பரம் நட்பை வெளிப்படுத்தினர். ஆனால் ஆட்டத்தின் நான்காவது நாளிலேயே ஆக்ரோஷம் தொற்றிக் கொண்டுள்ளது. நாளை நிறைவு நாள் ஆட்டத்தில் இந்த காட்சிகள் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Friday, December 12, 2014, 15:28 [IST]
Other articles published on Dec 12, 2014
English summary
After three good days of almost friendly Test cricket at the Adelaide Oval, the aggressive side -sledging is back with Australian and Indian players as they faced off on Friday
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X