72 மணி நேர கெடு.. மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்.. WFI தலைவர் மீது மத்திய அரசு நடவடிக்கை!

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் சூடுபிடித்துள்ள சூழலில் மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒலிம்பிக், காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போன்ற பெரும் தொடர்களில்
இந்தியாவுக்காக பதக்கங்களை வென்று குவிப்பதில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளும் முக்கியமானவர்கள்.

ஆனால் அவர்களுக்கு மல்யுத்த கூட்டமைப்பில் கொடுமை நிகழ்த்தப்படுவதாகவும், பாலியல் ரீதியான தொந்தரவுகளும் அதிகமாக உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், உள்ளிட்ட பல வீரர், வீராங்கனைகள் நேற்று மதியம் திடீரென டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் கொடுமைகளை செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து பேசிய அவர், மல்யுத்தத்த விளையாட்டிற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத பலர் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அப்படி உள்ளவர்கள் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டு, பிரதமர், உள்துறை அமைச்சர்கள் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் முக்கிய வீரர், வீராங்கனை வைத்த குற்றச்சாட்டை விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்து மல்யுத்த கூட்டமைப்பு 72 மணி நேரத்திற்கு விளக்கம் தர வேண்டும், அப்படி இல்லையெனில் தேசிய விளையாட்டு மேம்பாட்டுக் குறியீடு, 2011-ன் விதிபடி, கூட்டமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுதுறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Sports Ministry seeks explanation from WFI with in 72 hours, tooks a action for the allegations of Wrestlers
Story first published: Thursday, January 19, 2023, 16:44 [IST]
Other articles published on Jan 19, 2023
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X