For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலைப் பிடித்து மடக்கி தூக்கிப் போட்டு அமுக்கி.. 10 விநாடிகளில் பதக்கத்தை அள்ளிய சாக்ஷி!

ரியோ டி ஜெனீரோ: வெறும் 10 விநாடிகளில் இந்தியர்களின் கண்களை ஆனந்தத்தில் கசிய வைத்து விட்டார் சாக்ஷி மாலிக். கடைசி 10 விநாடிகளில்தான் அவர் தனது எதிராளியை அமுக்கிப் பிடித்து முடக்கி வெற்றியைத் தட்டிச் சென்றார்.

ரொம்ப சுவாரஸ்யமான தருணம் அது. தோல்வியின் வாயிலில்தான் இருந்தார் சாக்ஷி மாலிக். ஆனால் தனது துரித சுதாரிப்பால் அதைத் தவிடு பொடியாக்கி தன்னை எதிர்த்து மோதிய கிர்கிஸ்தானின் ஐசுலுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டார்.

ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த சாக்ஷி கடைசி 10 விநாடிகளில் ஐசுலுவை தடம் புரளச் செய்த விதம் அமேஸிங் என்று சாதாரண வார்த்தையில் முடித்து விட முடியாது. இது அதற்கும் மேல்!

மேட் மீது தூக்கிப் போட்டார்

மேட் மீது தூக்கிப் போட்டார்

போட்டியின் 2வது பீரியடின் 2வது நிமிடத்தில் ஐசுலுவை அப்படியே பிடித்து மேட் மீது தூக்கிப் போட்டார் சாக்ஷி. இது அவருக்கு முதல் திருப்பமாகும். அடுத்த சில விநாடிகளில் மீண்டும் அவர் ஐசுலுவை தூக்கி் புரட்டிப் போட்டு இருவருக்கும் இடையிலான புள்ளி வித்தியாசத்தை வெகுவாக குறைத்தார்.

சுதாரிக்க முடியாத ஐசுலு

சுதாரிக்க முடியாத ஐசுலு

திடீரென சாக்ஷி இப்படிப் புரட்டிப் போட்டதை எதிர்பாராத ஐசுலு தற்காப்பில் குதித்தார். சாக்ஷிக்கு கூடுதல் பாயிண்ட் கிடைத்து விடாத வகையில் அவர் டிபன்சில் இறங்கினார்.

காலைப் பிடித்து

காலைப் பிடித்து

போட்டி முடிய இன்னும் ஒரு சில விநாடிகளே இருந்த நிலையில் ஐசுலுவின் காலைப் பிடித்து அப்படியே மடக்கி மீண்டும் கவிழ வைத்தார் சாக்ஷி. இது அவருக்கு மேலும் 2 புள்ளிகளைத் தேடிக் கொடுத்தது. அதுவே வெற்றியையும் சேர்த்து வாரிக் கொணட்ு வந்தது.

அப்பீலுக்குப் போன ஐசுலு

அப்பீலுக்குப் போன ஐசுலு

உடனடியாக வானில் எகிறிக் குதித்து தனது வெற்றியைக் கொண்டாடினார் சாக்ஷி. ஆனால் ஐசுலுவின் பயிற்சியாளர் அப்பீலுக்குப் போனார். ஆனால் அப்பீலில் அவரது கோரிக்கை நிராகரிக்கப்படவே, சாக்ஷி வெற்றி பெற்றது உறுதியானது.

Story first published: Thursday, August 18, 2016, 12:12 [IST]
Other articles published on Aug 18, 2016
English summary
Wrestler Sakshi Malik took just 10 seconds to defeat her opponent in the Bronze medal winning bout on the Olympics.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X