போச்சே போச்சே.. உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த இத்தாலி சோகம்!

Posted By: Staff

மிலன்: அடுத்த ஆண்டு நடக்க உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வாய்ப்பை இத்தாலி இழந்தது. இதனால், அந்த நாட்டு மக்கள் மிகுந்த சோகத்தி்ல் உள்ளனர். நாடே துக்கம் அனுசரித்து வருகிறது.

நம்ம ஊருக்கு கிரிக்கெட் போல, ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து மிகவும் பிரபலம். ஒரு நாட்டுக்கான பட்ஜெட்டுடன், இங்கு நடக்கும் ஐபிஎல் போல அங்கு உள்நாட்டு போட்டிகள் நடக்கும்.

தலையா, தளபதியா என்று ரசிகர்கள் அடித்துக் கொள்ளும் அளவுக்கு, அங்கு உள்ளூர் கிளப்களுக்கு வெறிப்பிடித்த ரசிகர்கள் உள்ளனர். சாதாரண கிளப் போட்டிகளுக்கே பசி பட்டினி பார்க்காமல் ரசிகர்கள் குவிவார்கள்.

இந்த நிலையில், பிபா உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு, ஜூன் மாதத்தில் ரஷியாவில் நடக்க உள்ளது. இதில், ரஷியா உள்பட 32 அணிகள் பங்கேற்க உள்ளன.

209 நாடுகள் போட்டி

209 நாடுகள் போட்டி

இந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு, பிபாவில் பதிவு செய்துள்ள 209 நாடுகள் இடையே பல்வேறு கட்டங்களாக தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதுவரை 30 அணிகள் தகுதி பெற்றுவிட்டன.

தகுதி ஆட்டத்தில் மோதல்

தகுதி ஆட்டத்தில் மோதல்

அவ்வாறு உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிப் பெறுவதற்கான போட்டியில், நான்கு முறை சாம்பியனான இத்தாலியும், ஸ்வீடன் அணிகளும் மோதின. தில் முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. நேற்று நடந்த ஆட்டத்தில் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால், உலகக் கோப்பைக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் இத்தாலி களமிறங்கியது.

ஸ்வீடன் தகுதி பெற்றது

ஸ்வீடன் தகுதி பெற்றது

இத்தாலியின் மிலன் நகரில் நடந்த இந்த போட்டியைப் பார்க்க, 76 ஆயிரம் மக்கள் குவிந்திருந்தனர். மற்றவர்கள் டிவியின் முன் உட்கார்ந்திருந்தனர். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் கோலடிக்கவில்லை. போட்டி டிராவில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் வென்றதால், ஸ்வீடன் உலகக் கோப்பை போட்டிக்கு 30வது அணியாக தகுதிபெற்றது.

இத்தாலியில் சோகமயம்

இத்தாலியில் சோகமயம்

போட்டி முடிந்ததும், இத்தாலி வீரர்கள், மைதானத்தில் உறைந்து போய்விட்டனர். ரசிகர்களும், டிவியில் போட்டியை பார்த்தவர்களும், அதிர்ச்சியில் ஆழந்தனர். இத்தாலி முழுவதும் சோகமயமாகவே காட்சியளித்தது.

60 ஆண்டுகளுக்குப் பிறகு..

60 ஆண்டுகளுக்குப் பிறகு..

1934, 1938,1982, 2006ல் உலகக் கோப்பையை வென்ற, உலக கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் இத்தாலி, 60 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1958ல் ஸ்வீடனில் நடந்த உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதி பெறவில்லை. தற்போது, ஸ்வீடனிடம் தோற்றதால், அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை.

Story first published: Wednesday, November 15, 2017, 15:18 [IST]
Other articles published on Nov 15, 2017
Please Wait while comments are loading...