118 ஆண்டு போட்டியின் முதல் சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: உலகின் மிகவும் பழையான ஓபன் போட்டியான, ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில் பி.வி. சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றனர். அதே நேரத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வீராங்கனையிடம் சாய்னா நெஹ்வால் போராடி தோற்றார்.

எந்த விளையாட்டுப் போட்டியை எடுத்துக் கொண்டாலும், சர்வதேச அளவிலான முதல் மிகப் பெரிய போட்டி என்ற பெயர், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் போட்டிக்கு உள்ளது. பிரிட்டனின் பிர்மிங்ஹாமில் நடக்கும் இந்தப் போட்டி, 1899ல் துவங்கியது.

118 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பெருமைமிக்க போட்டியில் இதுவரை இரண்டு இந்தியர்கள் மட்டுமே பட்டம் வென்றுள்ளனர். 1980ல் பிரகாஷ் படுகோனே மற்றும் 2001ல் கோபிசந்த் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்த அபூர்வ சாதனையைப் புரிந்துள்ளனர்.

முதல் சுற்றில் இரண்டு வெற்றி

முதல் சுற்றில் இரண்டு வெற்றி

இந்த ஆண்டுக்கான போட்டி தற்போது துவங்கியுள்ளது. நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டங்களில், கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பிவி சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர். அதே நேரத்தில் சாய்னா நெஹ்வால், சாய் பிரனீத் கடினமாக போராடி தோல்வியடைந்தனர்.

விட்டு பிடிக்கும் ஸ்ரீகாந்த் பாணி

விட்டு பிடிக்கும் ஸ்ரீகாந்த் பாணி

ஆடவர் ஒற்றையர் பிரிவில், பிரான்சின் பிரைஸ் லேவர்டஸ் உடனான ஆட்டத்தில் வழக்கம் போல் முதல் செட்டை விட்டுக் கொடுத்து அடுத்த இரண்டு செட்களில் வென்று அசத்தினார் ஸ்ரீகாந்த். கடந்தாண்டு நான்கு சூப்பர் சீரியஸ் பட்டங்கள் வென்ற ஸ்ரீகாந்த், முதல் செட்டில் 7-21 என்று தோல்வி அடைந்தாலும் 21-14, 22-20 என அடுத்த செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

விரட்டி விரட்டி வென்றார்

விரட்டி விரட்டி வென்றார்

மகளிர் ஒற்றையரில் பிவி சிந்து, தாய்லாந்தின் போர்ன்பாவீ சோசுவாங்க் உடனான ஆட்டத்தில், 20-22, 21-17, 21-9 என்ற செட்களில் வென்றார். முதல் செட்டில் 11-4 என்ற கணக்கில் சிந்து முன்னிலையில் இருந்தார். ஒரு கட்டத்தில் அது 14-14 என மாறியது. பின்னர் 20-18 என சிந்து முன்னிலை பெற்றார். கடைசியில் அந்த செட்டில் சோசுவாங்க் வென்றார். அதற்கடுத்த இரண்டு செட்களில் விரட்டி விரட்டி அடித்து வென்றார் சிந்து.

சாய்னா போராட்டம் வீணானது

சாய்னா போராட்டம் வீணானது

அதே நேரத்தில் சாய்னா நெஹ்வால், உலகின் நம்பர் 1 வீராங்கனையான, நடப்பு சாம்பியன் தாய்லாந்தின் டாய் ட்சு-யிங்கிடம் போராடி 14-21, 18-21 என்ற செட்களில் தோல்வியடைந்தார்.

பிரனீத்த் முதல் செட்டில் வென்றார்

பிரனீத்த் முதல் செட்டில் வென்றார்

ஆடவர் ஒற்றையரில், போட்டிக்கான தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள கொரியாவின் சான் வான் ஹூவுடனான ஆட்டத்தில் முதல் செட்டில் சாய் பிரனீத் 21-13 என்ற கணக்கில் வென்றார். அதற்கடுத்த செட்களை 21-15, 21-11 என்று வென்றார் ஹூ.

English summary
Sindhu, Srikanth sails through in the All England open
Story first published: Thursday, March 15, 2018, 10:10 [IST]
Other articles published on Mar 15, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற