ஐதராபாத்: பிரீமியர் பாட்மின்டன் லீக் மூன்றாவது சீசனின் பைனலுக்கு, ஐதராபாத் ஹண்டர்ஸ் முதல் முறையாக நுழைந்தது. பி. சாய் பிரனீத்தின் சிறப்பான ஆட்டத்தால், டெல்லி டேஷர்ஸ் அணியை 3-0 என்ற கணக்கில் ஐதராபாத் ஹண்டர்ஸ் வென்றது.
பிரீமியர் பாட்மின்டன் லீக் ஆட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று இரவு நடந்த முதல் அரை இறுதியில், ஐதராபாத் ஹண்டர்ஸ் அணியும், டெல்லி டேஷர்ஸ் அணியும் மோதின.
முன்னதாக நடந்த லீக் ஆட்டத்தின்போது, டெல்லி டேஷர்ஸ் 5-0 என்ற கணக்கில் ஐதராபாத் ஹண்டர்ஸ் அணியை வென்றிருந்தது. ஆனால்,அரை இறுதியில் அதை அப்படியே திருப்பி போட்டது பி.சாய் பிரனீத்தின் ஆட்டம்.
டெல்லி டேஷர்ஸ் அணியின் முக்கிய வீரரான சீனாவின் டியான் ஹூவேயை 15-9,15-8 என செட்களில் அனாயசியமாக வென்றார் சாய் பிரனீத்.
அதன் பிறகு அணியின் கேப்டனான ஸ்பெயினின் கரோலினா மரின் வெற்றியை உறுதி செய்தார்.
பெங்களூரு பிளாஸ்டர்ஸ் – புதுமுகம் அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான மற்றொரு அரை இறுதியில் வெற்றி பெறுவோருடன், 14ம் தேதி பைனலில் ஐதராபாத் ஹண்டர்ஸ் மோத உள்ளது.