For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” – பேட்மிண்டன் களத்தில் பி.வி. சிந்து வெற்றிநடை

ஜகார்டா; இந்தியாவில் பேட்மிண்டன் தற்போது வளர்ந்து வரும் விளையாட்டாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் சாய்னா நேவால், பி.வி.சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் தான்..

நமது நாட்டில் உள்ள பல சிறுமிகளுக்கு ஹீரோக்களாகவும்,ரோல் மாடல்களாகவும் சாய்னா,பி.வி.சிந்து உள்ளனர். 2016 ஒலிம்பிக்கில் வெள்ளி, 2021 ஒலிம்பிக்கில் வெண்கலம் என அசத்திய சிந்து தற்போது மீண்டும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளார்

அந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகைஅந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகை

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் களமிறங்கிய பி.சி.சிந்து காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த தொடரில் மூன்றாவது நிலை வீராங்கனையாக சிந்து களமிறங்கினார்

ஸ்பெயின் வீராங்கனை

ஸ்பெயின் வீராங்கனை

மகளிர் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை கிளாராவை எதிர்கொண்டார். இதுவரை கிளாராவை சிந்து எதிர்கொண்டதே இல்லை என்பதால் சிந்து, சற்று தடுமாறினார். இதனால் முதல் செட்டை பி.வி.சிந்து 17-21 என்ற கணக்கில் இழந்தார். பின்னர் சுதாரித்து கொண்டு தனது வழக்கமான அதிரடி ஷாட்களை சிந்து ஆட தொடங்கினார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

வெற்றி

வெற்றி

அடுத்த செட்டில் ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 2வது செட்டை 21-7 என்ற கணக்கில் வென்றார். மூன்றாவது செட்டிலும் ஸ்பெயின் வீராங்கனை ஆதிக்கம் செலுத்த சிந்து எந்த வாய்ப்பையும் தரவில்லை. சுமார் 47 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் பி.வி.சிந்து, 17-21, 21-7, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

காலிறுதி

காலிறுதி

இந்த வெற்றியின் மூலம் பி.வி.சிந்து காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதியில், அவர் தரவரிசையில் 30வது இடத்தில் உள்ள துருக்கி வீராங்கனை நெஸ்லிஹானை எதிர்கொள்கிறார்.இதுவரை நெஸ்லிஹானை மூன்று முறை பி.வி. சிந்து எதிர்கொண்டு மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்ரீகாந்த் கிடாம்பி

ஸ்ரீகாந்த் கிடாம்பி

இதே போன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி காலிறுதிக்கு தகுதி பெற்றார். 2வது சுற்றில் 6வது நிலை வீரரான ஜோனத்தன் கிறிஸ்டியை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த் , 13-21, 21-18, 21-15 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு ஸ்ரீகாந்த் கிடாம்பி தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இதனிடையே, இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் போட்டியில் மற்ற இந்திய வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லக்சயா சென் , கலப்பு இரட்டையர் பிரிவில் கப்பிலா, சிக்கி ஆகியோர் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினர்.

Story first published: Thursday, November 18, 2021, 20:21 [IST]
Other articles published on Nov 18, 2021
English summary
Indonesia masters Badminton- PV sindhu Qualifies for Quaterfinal. Srikanth kidambi also made into quarters. Other Indian Players disappointed
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X