பிவி சிந்து அசத்தல் வெற்றி.. தாய்லாந்து ஓபன் தொடரில் காலிறுதிக்கு முன்னேற்றம்!

பாங்காக் : தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார் இந்தியாவின் பிவி சிந்து.

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பலர் பங்கேற்று உள்ளனர்.

இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் சுற்றில் பிவி சிந்து பங்கேற்றார்.

வியாழன் அன்று நடைபெற்ற அந்த ஆட்டத்தில் மலேசியாவின் கிசோனா செல்வதுரையை 21 - 10, 21 - 12 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் பிவி சிந்து.

இந்தப் போட்டி 35 நிமிடங்களே நடைபெற்றது. ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில் சிந்து ஆதிக்கம் செலுத்தினார். இந்த வெற்றி மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரணாய் ராய் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தோல்வி அடைந்து வெளியேறினார். அவர் இரண்டாம் சுற்றில் மலேசியாவின் டேரன் லியூவிடம் 17 - 21, 18 - 21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.

என்னையா டீமை விட்டு தூக்குனீங்க? வெறியாட்டம் ஆடிய ஆஸி. வீரர்.. அதிரடி செஞ்சுரி!

பிரணாய் ராய் முதல் சுற்றில் தோள்பட்டையில் கடுமையாக காயம் அடைந்த போதும் வலியை பொருட்படுத்தாமல் ஆடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அப்படி ஒரு போராட்டத்துக்கு பின் வென்ற அவர் இரண்டாம் சுற்றில் தோல்வி அடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா இரண்டாம் சுற்றில் 21 - 12, 21 - 9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு அசத்தலாக முன்னேறி இருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
PV Sindhu enters Quarter finals in Thailand Open
Story first published: Thursday, January 21, 2021, 19:23 [IST]
Other articles published on Jan 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X