For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

50 கோடிப்பே.. 50 கோடி! சீன நிறுவனத்துடன் மலைக்க வைக்கும் டீல் போட்ட பிவி சிந்து!

டெல்லி : இந்திய நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்து 50 கோடி ரூபாய் மதிப்பிற்கு சீன விளையாட்டு சாதன நிறுவனமான லி நிங் உடன் விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளுக்கானது என கூறப்படுகிறது. சீன நிறுவனமான லின் நிங்-இன் இந்திய செயல்பாடுகளை கவனித்து வரும் சன்லைட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை செய்து முடித்துள்ளது.

பாட்மிண்டன் வீரர்களுக்கு குறி

பாட்மிண்டன் வீரர்களுக்கு குறி

இந்திய பாட்மிண்டன் வீரர்களை குறி வைத்து இருக்கும் லி நிங் முன்னதாக முன்னணி பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், பாருபள்ளி காஷ்யப், மனு அத்திரி, சுமீத் ரெட்டி ஆகியோருடன் ஒப்பந்தம் செய்து முடித்துள்ளது.

50 கோடி ஒப்பந்தம்

50 கோடி ஒப்பந்தம்

அடுத்து உலகின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனை சிந்துவுடன் மிகப் பெரிய தொகையாக 50 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில் விளம்பர வருவாயாக 40 கோடி ரூபாய் பெறும் சிந்து, 10 கோடி ரூபாய் மதிப்பிற்கு விளையாட்டு சாதனங்கள் பெறுவார் என கூறியுள்ளது சன்லைட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.

கோலிக்கு இணையான ஒப்பந்தம்

கோலிக்கு இணையான ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தம் குறித்து கூறிய அந்த நிறுவனம், கிரிக்கெட் வீரர் கோலி, பிரபல பூமா நிறுவனத்துடன் செய்த விளம்பர ஒப்பந்தத்துக்கு நிகரானது இது என குறிப்பிட்டுள்ளார். கோலி பூமா-வுடன் எட்டு ஆண்டுகளுக்கு 100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். சிந்து நான்கு ஆண்டுகளுக்கு லின் நிங்குடன் 50 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

யோனக்ஸ் உடன் போட்டி

யோனக்ஸ் உடன் போட்டி

2014-15இல் இந்திய பாட்மிண்டன் வீரர்கள் பலரும் லி நிங் உடன் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்து இருந்தனர். பின்னர் அதன் போட்டி நிறுவனமான யோனக்ஸ் அதிக தொகைக்கு இந்திய வீரர்களை ஒப்பந்தம் செய்தது.

ஒப்பந்தத் தொகை எவ்வளவு?

ஒப்பந்தத் தொகை எவ்வளவு?

மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது லி நிங் அதிரடி தொகைக்கு இந்திய வீரர்களை வளைத்துப் போட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு சிந்து - 50 கோடி, கிடாம்பி ஸ்ரீகாந்த் - 35 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பாருபள்ளி காஷ்யப் - 8 கோடி, , மனு அத்திரி, சுமீத் ரெட்டி - 4 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர்.

பயிற்சி ஏற்பாடுகள் உண்டு

பயிற்சி ஏற்பாடுகள் உண்டு

இது தவிர்த்து சிந்து, ஸ்ரீகாந்த் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல தேவையான அனைத்து பயிற்சி ஏற்பாடுகளும் செய்து தர லி நிங் தயாராக இருப்பதாக கூறியுள்ளது. எந்த வெளிநாட்டு பயிற்சியாளர் வேண்டுமானாலும் களமிறக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளது.

Story first published: Saturday, February 9, 2019, 12:11 [IST]
Other articles published on Feb 9, 2019
English summary
PV Sindhu signed a 50 crore deal with Chinese brand Li Ning
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X