For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரியா ஓபன் பாட்மிண்டன்.. மகளிர் ஒற்றையர் காலிறுதியில் சாய்னா நேவால்

சியோல் : கொரியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் பங்கேற்று வரும் சாய்னா நேவால் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்ற சாய்னா, தென்கொரியாவின் கா ஈயுன் கிம்-ஐ சந்தித்தார். வெறும் 37 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த போட்டியில் சாய்னா 21-18, 21-18 என வெற்றி பெற்றார்.

Saina Nehwal reaches Korea Open 2018 Quarter finals. Will face Okuhara at semis

கொரியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் மற்ற இந்திய வீரர்கள் வெளியேறி விட்ட நிலையில், சாய்னா நேவால் மட்டுமே இன்னும் நீடித்து வருகிறார். சமீர் வர்மா, வைஷ்ணவி ரெட்டி ஆகியோர் முன்னதாகவே தொடரில் இருந்து வெளியேறினர்.

கிம்முக்கு எதிரான வெற்றியை அடுத்து, காலிறுதியில் ஜப்பானின் நோசொமி ஒக்குஹாரவை சந்திக்கிறார் சாய்னா நேவால். இந்த போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றது, காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்றது ஆகியவையே சமீபத்தில் சாய்னா பெற்ற பெரிய வெற்றிகளாகும்.

கொரியா ஓபன் தொடரில் வென்று மீண்டும் பாட்மிண்டன் அரங்கில் உச்சத்தை தொடுவாரா சாய்னா? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே நிலவுகிறது

Story first published: Thursday, September 27, 2018, 17:19 [IST]
Other articles published on Sep 27, 2018
English summary
Saina Nehwal reaches Korea Open 2018 Quarter finals. Will face Japan’s Okuhara at semis
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X