சிந்துவைத் தக்க வைத்தது விஜயகாந்த் மகனின் சென்னை ஸ்மாசர்ஸ்!

Posted By: Staff

ஹைதராபாத்: .மூன்றாவது பிரீமியர் பாட்மின்டன் லீக் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை ஸ்மாசர்ஸ் அணி, உலகின் நம்பர் 2 வீராங்கனை பி.வி. சிந்துவை தக்க வைத்தது.

சாய்னா நெஹ்வால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோரும் தக்க வைக்கப்பட்டனர். நேற்று நடந்த ஏலத்தில் எச்.எல். பிரனாய் மிகவும் அதிகபட்சமாக, 62 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

பாட்மின்டன் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், பிரீமியர் பாட்மின்டன் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. மூன்றாவது சீசன் போட்டிகள் வரும் டிசம்பர் 22 முதல், 2018 ஜனவரி 14 வரை நடக்க உள்ளது. இந்த முறை, அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் மற்றும் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணிகள் புதிதாக சேர்ந்துள்ளன.

வீரர்கள் ஏலம்

வீரர்கள் ஏலம்

மூன்றாவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று நடந்தது. இதில், எச்.எஸ். பிரனாயை, மிகவும் அதிகபட்சமாக 62 லட்சம் ரூபாய்க்கு அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி ஏலம் எடுத்தது. மகளிர் ஒற்றையரில் உலகின் நம்பர் 1 வீராங்கனை தாய் சூ யிங்கை, 52 லட்சம் ரூபாய்க்கு அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் ஏலம் எடுத்தது.

நம்பர் 1 வீரர் விக்டர் அலெக்சன்

நம்பர் 1 வீரர் விக்டர் அலெக்சன்

ஆடவர் ஒற்றையரில் நம்பர் 1 வீரர் விக்டர் அலெக்சனை, பெங்களூரு பிளாஸ்டர்ஸ் ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதற்கு முன் கிடாம்பி ஸ்ரீகாந்தை அவாதி வாரியர்ஸ் அணி, ரூ.56,10,000க்கு ஏலம் எடுத்ததே மிகவும் அதிகபடசமாக இருந்தது.

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

தக்க வைக்கப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு, 25 சதவீத உயர்வு கிடைக்கும். அதன்படி, சென்னை ஸ்மாசர்ஸ் அணிக்காக விளையாட உள்ள பி.வி.சிந்துவுக்கு ரூ.48.75 லட்சமும்,. அவதே வாரியர்ஸ் அணிக்காக விளையாட உள்ள சாய்னா நெஹ்வாலுக்கு ரூ.41.25 லட்சம் கிடைக்கும்.

இந்த ஆண்டு சீசனில் 8 அணிகள்

இந்த ஆண்டு சீசனில் 8 அணிகள்

இந்தாண்டு சீசனில் மொத்தம் 8 அணிகள் விளையாட உள்ளன. அகமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், அவதே வாரியர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், சென்னை ஸ்மாசர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், இன்பினைட் டில்லி ஏசர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

Story first published: Tuesday, October 10, 2017, 15:10 [IST]
Other articles published on Oct 10, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற