For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொஞ்சமாவது எங்களையும் மதியுங்களேன்.. ஜுவாலா கட்டா குமுறல்!

டெல்லி: எங்களைப் போன்ற வீராங்கனைகளுக்கும், கிரிக்கெட் தவிர்த்த பிற விளையாட்டுக்களுக்கும் உரிய மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் தரப்பட வேண்டும். நாங்கள் பணத்திற்காக விளையாடவில்லை. அப்படி விளையாட நினைத்திருந்தால் பேட்மிண்டனையும், ஸ்குவாஷையும் தேர்ந்தெடுத்திருக்க மாட்டோம். வேறு விளையாட்டுக்குப் போயிருப்போம் என்று பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா கூறியுள்ளார்.

இந்தியா டுடே மகளிர் மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவில் தீபிகாவைப் போலவே ஜுவாலா கட்டாவும் விளையாட்டு பாரபட்சம் குறித்து குமுறல் வெளியிட்டார்.

ஜுவாலாவின் மனக் குமுறலிலிருந்து....

மதியுங்கள்

மதியுங்கள்

எங்களுக்கும் கொஞ்சமாவது அங்கீகாரம், மதிப்பு, மரியாதை தேவை என்று நான் கருதுகிறேன்.

இதுக்கு எதுக்கு வரப் போறோம்

இதுக்கு எதுக்கு வரப் போறோம்

எங்களுக்குப் பணம் தேவையில்லை. அப்படி நினைத்திருந்தால் வேறு விளையாட்டை தேர்ந்தெடுத்திருப்போம். எதற்காக ஸ்குவாஷையும், பேட்மிண்டனையும் விளையாடப் போகிறோம்.

சாம்பியனாவதா முக்கியம்

சாம்பியனாவதா முக்கியம்

ஒரு தேசிய சாம்பியானவதற்கே இங்கு நூறு விதமான போராட்டங்களை நாங்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இதில் சர்வதேச சாம்பியன் பட்டத்தைப் பற்றியெல்லாம் எங்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

சீனாவைப் பாருங்கள்

சீனாவைப் பாருங்கள்

சீனாவில் ஒருவர் பேட்மிண்டன் ராக்கெட்டைத் தூக்கிய நாளிலிருந்தே அரசு ஊக்குவிக்க ஆரம்பித்து விடுகிறது. அந்த வீரருக்கும், வீராங்கனைக்கும் என்ன தேவையோ அதை முழுமையாக தருகிறார்கள். அரசு பார்த்துக் கொள்கிறது.

இங்கு எத்தனை பேர்..

இங்கு எத்தனை பேர்..

ஆனால் இங்கு பாருங்கள். நான், சாய்னா நேஹ்வால், சிந்து.. இவர்களைத் தாண்டி யாருமே இல்லையே... நம்மிடம் ஒரு பத்து பேர் கூடவா இல்லாமல் போய் விட்டோம்.. ஏன் இந்த அவல நிலை.

பணமெல்லாம் எங்கே போகிறது

பணமெல்லாம் எங்கே போகிறது

அரசு பேட்மிண்டன் சங்கத்திற்கு நிறைய நிதி கொடுப்பதாக நான் கேள்விப்படுகிறேன். ஆனால் பணமெல்லாம் எங்கே போகிறது என்றுதான் தெரியவில்லை.

கிரிக்கெட்டைப் போலவே

கிரிக்கெட்டைப் போலவே

கிரிக்கெட்டுக்குத் தரப்படும் முக்கியத்துவம், கவனிப்பு பிற விளையாட்டுக்களுக்கும் கிடைக்க வேண்டும்.

பிசிசிஐயைப் பார்த்து திருந்துங்க

பிசிசிஐயைப் பார்த்து திருந்துங்க

இந்திய கிரிக்கெட் வாரியம், 12 நாடுகளில் கிரிக்கெட்டை பிரமாதமாக வளர்த்துள்ளது. அதைப் பார்த்து பிற விளையாட்டு அமைப்புகளும் திருந்த வேண்டும், பாடம் கற்க வேண்டும் என்றார் ஜுவாலா கட்டா.

Story first published: Sunday, August 10, 2014, 14:12 [IST]
Other articles published on Aug 10, 2014
English summary
Speaking at the India Today Woman Summit and Awards 2014 on Saturday, Jwala Gutta said: "We expect a little bit of acknowledgement and respect. If we were here to make money, we would have picked up other sports, not badminton and squash." Jwala said there are hundreds of things to deal with when one becomes a national champion, forget about being an international champion.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X