For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏமாத்துறாங்க.. ஊழல்.. கூச்சல் போட்ட பல்கேரியா.. நடுவர்கள் இந்தியாவிற்கு ஆதரவா?

நியூடெல்லி : மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது.

குத்துச்சண்டை போட்டிகள் என்றாலே சர்ச்சை இல்லாமலா? என்பது போல இந்த முறையும் சர்ச்சைகள் வெடித்துள்ளன.

இந்த முறை பல்கேரியா நாட்டை சேர்ந்த வீராங்கனை மற்றும் அவரது பயிற்சியாளர் நடுவர்களை நேரடியாக கூச்சலிட்டு குற்றம் சாட்டினர். அது மட்டுமின்றி, இங்கிலாந்து நாட்டு வீராங்கனை மற்றும் இரு இந்திய வீராங்கனைகளின் சந்தேகத்திற்குரிய தோல்விகளும் சர்ச்சைகளுக்கு தூபம் போட்டுள்ளன.

பல்கேரியா பஞ்சாயத்து

பல்கேரியா பஞ்சாயத்து

பல்கேரியா நாட்டை சேர்ந்த ஸ்டானிமிரா பெட்ரோவா, இந்தியாவின் சோனியா சாஹலை சந்தித்தார். இந்த மோதலில், சோனியா சாஹல் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்த உடன், அதை ஏற்காத பல்கேரியா நாட்டு வீராங்கனையும், அவரது பயிற்சியாளரும் "ஏமாத்துறாங்க.. ஊழல்" (Cheating, Corruption) என கூச்சலிட்டனர். பெட்ரோவா நேரடியாக நடுவர்களை விரலால் சுட்டிக் காட்டி இதை கூறினார். அவரது பயிற்சியாளர் தண்ணீர் குடுவையை தூக்கி போட்டி நடைபெறும் மேடையில் வீசினார்.

நடவடிக்கை எடுத்த அமைப்பு

நடவடிக்கை எடுத்த அமைப்பு

இந்த சம்பவத்தை அடுத்து சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு, பல்கேரியா பயிற்சியாளர் இந்த சாம்பியன்ஷிப் தொடர் முடியும் வரை போட்டி நடைபெறும் மேடை அருகே வரக் கூடாது என கூறியுள்ளது. மேலும், அவர் மீது மேலும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது.

இங்கிலாந்தின் ஒத்துழையாமை

இங்கிலாந்தின் ஒத்துழையாமை

இது ஒரு புறமிருக்க இங்கிலாந்தின் எபோனி ஆலிஸ் ஜோன்ஸ் மற்றும் அவரது பயிற்சியாளர், இந்திய வீராங்கனை பிங்கி ராணிக்கு எதிரான போட்டியில் கிடைத்த தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது. எனினும், அவர்கள் கூச்சல், குழப்பம் செய்யாமல் அமைதி வழியில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். நிச்சயம் கலந்து கொள்ள வேண்டிய கலப்பு பகுதி போட்டியை இவர்கள் இருவரும் புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி உள்ளனர்.

இந்தியர்களுக்கும் அதே தான்

இந்தியர்களுக்கும் அதே தான்

இது என்னடா! இந்தியாவில் நடக்கும் போட்டியில் இந்தியர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருவது போல கூறுகிறார்களே என பார்த்தால், இரண்டு இந்திய வீராங்கனைகளின் தோல்வியையும் கேள்விக்கு உள்ளாகியுள்ளார் இந்திய பயிற்சியாளர் ஷிவ் சிங். இந்தியாவின் சரிதா தேவி மற்றும் சவீட்டி பூரா இருவரும் தோல்வி அடைந்தனர். இவர்களுக்கு எப்படி புள்ளிகளை கணக்கிட்டனர் என கேள்வி எழுப்பியுள்ளார் ஷிவ் சிங்.

நடுவர்கள் செய்தது சரியா?

நடுவர்கள் செய்தது சரியா?

இவரின் கூற்றுப் படி, ஒரு வீரர் எதிராளியின் குத்து வாங்கி கீழே விழுந்தால் மட்டுமே "ஸ்டான்டிங் கவுன்ட்" என்ற எழுந்து நிற்பதற்கான எண்ணிக்கையை எண்ண வேண்டும். ஆனால், சரிதா மற்றும் பூரா இருவரும் எதிராளியின் அடியால் கீழே விழவில்லை. எனினும், நடுவர்கள் அவர்களுக்கு ஸ்டான்டிங் கவுன்ட் அளித்தார்கள். இதன் மூலம் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப் படாவிட்டாலும் இது எதிராளிக்கு அதிக மதிப்பெண் வழங்கும் எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கும்" என கூறினார் ஷிவ் சிங்.

ஆக மொத்தத்தில், எல்லோரும் பிரச்சனை பண்ணனும்னு முடிவு பண்ணிட்டாங்க போல.. சீக்கிரம் பஞ்சாயத்தை கூட்டுங்க.

Story first published: Tuesday, November 20, 2018, 11:22 [IST]
Other articles published on Nov 20, 2018
English summary
Women world boxing championship stepped into controversy after judges decisions questioned
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X