For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்படிங்க? ஒரு அணியில் 11 பேரும் கோலியாக முடியும்? கப்பித்தனமா பேசுறீங்க.. பொங்கும் முன்னாள் வீரர்

கொழும்பு:ஒரு அணியில் 11 விராட் கோலி இருக்க முடியாது என்று இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் அண்மையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, ஷிகர் தவான் 143 ரன்கள் விளாசினார்.

உண்மையில் இந்திய அணி குவித்த அந்த ஸ்கோரை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா தோற்று தொடரை இந்தியா கைப்பற்றிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் களத்தில் நடந்ததோ வேறு.

வாழ்க்கை ஸ்டெம்புகளுக்கு.. இல்ல பஸ் படிக்கட்டுக்கு நடுவில இருக்கலாம்.. ரஜினிக்கே பஞ்ச் வைத்த வீரர் வாழ்க்கை ஸ்டெம்புகளுக்கு.. இல்ல பஸ் படிக்கட்டுக்கு நடுவில இருக்கலாம்.. ரஜினிக்கே பஞ்ச் வைத்த வீரர்

சமனில் இருக்கும் தொடர்

சமனில் இருக்கும் தொடர்

ஆஸ்திரேலிய அணி, 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 2-2 என சமனில் உள்ளது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. பந்துவீச்சு, பீல்டிங்கில் சொதப்பல், தோனி இல்லாதது என ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் அடுக்கிக் கொண்டே சென்றனர்.

கருத்து

கருத்து

இந்நிலையில், மொகாலி போட்டி குறித்து இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தமது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் பேசியதாவது:

வெற்றி கிடைக்கும்

வெற்றி கிடைக்கும்

சில போட்டிகளில் வெற்றி பெற்றால், சில போட்டிகளில் தோல்வி கிடைக்கும். அது தான் கிரிக்கெட். எல்லாரும்... எல்லா போட்டிகளிலும் வெல்ல முடியாது.

11 பேரும் கோலிகளா?

11 பேரும் கோலிகளா?

இல்லையென்றால் ஒவ்வொரு அணியிலும் 11 கோலி அல்லது சச்சின் டெண்டுல்கர் அல்லது பிராட்மேன் இருக்க வேண்டும். அது முடியாது.

நல்ல அனுபவம்

நல்ல அனுபவம்

இந்திய அணி மிக சிறப்பாக விளையாடியது. எனவே... விமர்சனங்களை தவிர்த்து, உலக கோப்பைக்கு முன் கிடைத்த நல்ல அனுபவமாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரசிகர்களுக்கு அறிவுரை

ரசிகர்களுக்கு அறிவுரை

வீரர்கள் மீது ரசிகர்கள் அதிக அழுத்தம் தரக் கூடாது. அதை செய்வதை தடுத்தால் தான் அடுத்து வரக்கூடிய போட்டிகளில் அவர்களால் கவனம் செலுத்த முடியும் என்று முரளிதரன் அறிவுரை கூறினார்.

Story first published: Tuesday, March 12, 2019, 15:13 [IST]
Other articles published on Mar 12, 2019
English summary
11 players will not be Virat Kohli says Muttiah Muraleedharan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X