For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரெய்னா.. யுவராஜ்.. ஆளுக்கு ஒரு "அட்டாக் பிளான்" வச்சுருக்கோம்.. ஆஸி. கேப்டன் பின்ச்

அடிலைட்: இந்தியாவுக்கு எதிரான டுவென்டி 20 போட்டிகளில் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற அதிரடி வீரர்களைச் சமாளிக்கத் தனித் திட்டம் வகுத்துள்ளோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.

ஒரு நாள் தொடரை எளிதாக வென்று விட்ட தெம்பில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி அடுத்து டுவென்டி 20 தொடரையும் வெல்லும் முனைப்புடன் களத்தில் குதிக்கிறது.

நாளை இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டுவென்டி 20 போட்டி அடிலைடில் நடைபெறுகிறது. இதை வெல்ல இரு அணிகளும் தயார்படுத்தி வருகின்றன. இதுகுறித்து பின்ச் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது...

நாங்க ரெடி

நாங்க ரெடி

இந்திய அணி தனது அனுபவம் வாய்ந்த வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னோ போன்றோரை வரவழைத்துள்ளது. அவர்களைச் சமாளிக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்.

அனைத்தையும் பரீட்சீப்போம்

அனைத்தையும் பரீட்சீப்போம்

விரைவில் உலகக் கோப்பைப் போட்டி வருகிறது. எனவே அனைத்தையும் பரீட்சித்துப் பார்க்க இந்தியா விரும்புகிறது. நாங்களும் அப்படியே. அனைத்து வாய்ப்புகளையும் அலசி ஆராய்ந்து திட்டமிடுவோம்.

தனித் தனி பிளான்

தனித் தனி பிளான்

யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்களை சமாளிக்கத் தனித் தனித் திட்டமிடப்படும். இது முக்கியமானது. இவர்கள் சிறப்பாக ஆடக் கூடியவர்கள்.

அடித்து ஆடாதவரை

அடித்து ஆடாதவரை

இவர்கள் அடித்து ஆடாதவரை நல்லது. அடிக்க ஆரம்பித்து விட்டால் நிறுத்துவது கஷ்டம். அதற்குள் இவர்களை அவுட்டாக்க முயற்சிப்போம்.

அனுபவமும், இளமையும்

அனுபவமும், இளமையும்

ஒரு அணியில் அனுபவஸ்தர்கள் இருந்தால் தானாகவே ஒரு அமைதி வந்து விடும். அதேசமயம், இளைஞர்கள் அதிகம் இருந்தால் ஒரு வித பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும்.

ஆஸி பேட்டிங்

ஆஸி பேட்டிங்

ஆஸ்திரேலிய அணியில் நல்ல வீரர்கள் பலர் உள்ளனர். பல சிறந்த வீரர்கள் வெளியில் உள்ளனர். சிலருக்கு உள்ளே வர வாய்ப்பு கிடைத்துள்ளது. வேறு எங்கும் இப்படிப் பார்க்க முடியாது.

புதியவர்கள் அருமையானவர்கள்

புதியவர்கள் அருமையானவர்கள்

சில புதியவர்கள் அணிக்கு வந்துள்ளனர். அவர்கள் அருமையானவர்கள். நிறைய தூரம் போக வேண்டியவர்கள். அவர்கள் நல்ல பீல்டர்களாகவும் உள்ளனர். டிரவிஸ் ஹெட் சிறப்பாக பேட் செய்யக் கூடியவர். கிறிஸ் லின் இருக்கிறார் என்றார் பின்ச்.

Story first published: Monday, January 25, 2016, 17:11 [IST]
Other articles published on Jan 25, 2016
English summary
Upbeat after convincingly taking the ODI series, Australia's T20I skipper Aaron Finch is confident that the hosts can handle the more experienced Indian reinforcements in Yuvraj Singh and Suresh Raina that arrived here for the three-match rubber starting tomorrow (January 26).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X