For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இரண்டு பேருக்குமே ரெண்டு… இரட்டிப்பு மகிழ்ச்சியில் இந்திய அணிகள்

By Srividhya Govindarajan

டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க மண்ணில், ஒரே நேரத்தில் இரண்டு தொடர்களை வென்ற புதிய சாதனையை, இரண்டு இந்திய அணிகளும் புரிந்துள்ளன.

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளன. ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 5-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வென்றது.

2 Series win for 2 teams


மறுபக்கம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என்று வென்றது. அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என முன்னிலையில் இருந்தது.

ஆண்கள் அணி, முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என, சமநிலையில் இருந்தது. இந்த டி-20 தொடரின்போது, இந்தியா ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு பல ஒற்றுமைகள் இருந்தது.

ஒரே நாளில் இரு அணிகளுக்கும் போட்டி நடந்ததுடன், வெற்றி, தோல்வி என, பல விஷயங்களிலும் இரு அணிகளுக்கும் இடையே ஒற்றுமை இருந்தது.

நேற்று முன்தினம் இரவு நடந்த, டி-20 தொடரின் கடைசி ஆட்டம் வரை தொடர் வெற்றி முடிவாகாததிலும் ஒற்றுமே இருந்தது. கடைசி ஆட்டத்திலும், இரு அணிகளும் முதலில் விளையாடி, தென்னாப்பிரிக்காவை வென்றது.

ஆடவர் அணி 7 ரன்கள் வித்தியாசத்திலும், பெண்கள் அணி, 98 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றன. ஆடவர் அணி 2-1 என்ற கணக்கிலும், மகளிர் அணி 3-1 என்ற கணக்கிலும் வென்றன.

இதன் மூலம் .தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, தென்னாப்பிரிக்க மண்ணில், இரண்டு தொடர்களை முதல் முறையாக வென்ற சாதனையை, இரண்டு அணிகளும் புரிந்துள்ளன.

Story first published: Monday, February 26, 2018, 12:27 [IST]
Other articles published on Feb 26, 2018
English summary
Series win for both Indian teams
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X