இலங்கைக்கு எதிரான 2வது டி-20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி!

Posted By:
இலங்கைக்கு எதிரான 2வது டி-20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி!- வீடியோ

கொழும்பு: இந்தியா, இலங்கை மோதும் முத்தரப்பு தொடரின் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி-20 போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் இன்று இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி தொடங்கி இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும்.இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்.

2nd T-20 match in Sri Lanka against India

இலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.இதற்கு நிதாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

முதல் போட்டியில் இந்தியா இலங்கையிடம் தோற்றது. அதன் பின் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது. அதற்கு அடுத்த இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வென்றது.

இதனால் புள்ளிகள் பட்டியில் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை முதலிலும், இந்தியா இரண்டாவதும், வங்கதேசம் கடைசி இடத்திலும் இருந்தது.

2nd T-20 match in Sri Lanka against India

தற்போது இந்தியா இலங்கை மோதும் இரண்டாவது போட்டி நடந்தது. இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை, ரிஷாப் பேண்டிற்கு பதில் கே.எல் ராகுல் சேர்கப்பட்டார்.

மழை காரணமாக தாமதமாக தொடங்கிய போட்டி 19 ஓவராக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. இதில் இலங்கை தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. முதலில் ஆடிய இலங்கை 9 விக்கெட்டுக்கு 152 ரன் எடுத்தது.

அடுத்து ஆடிய இந்தியா தொடக்கத்திலேயே சொதப்பியது. இந்த முறையும் ரோஹித் மோசமாக அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

ஆனால் தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே சிறப்பாக ஆடினார்கள். இதனால் இந்தியா 17.3 ஓவரில் 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Story first published: Monday, March 12, 2018, 18:39 [IST]
Other articles published on Mar 12, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற