For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட்-க்கு வைக்கப்பட்ட செக்.. இனி எந்த சலுகையும் செல்லவே செல்லாது.. 4 சீனியர்களால் வந்த ஆப்பு!

வங்கதேசம்: இந்திய அணியில் தொடர்ச்சியாக சலுகை பெற்று வரும் ரிஷப் பண்ட் நன்றாக சிக்கிக்கொள்ளும்படி ஒரு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஆச்சரியம் தரும் வகையில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய 4 சீனியர்களும் இணைந்து ஆடவுள்ளனர்.

நாளை வங்கதேசம் செல்லும் இந்திய அணி.. ரோகித் முன் காத்திருக்கும் சவால் என்ன? ரசிகர்களுக்கு குஷி தான் நாளை வங்கதேசம் செல்லும் இந்திய அணி.. ரோகித் முன் காத்திருக்கும் சவால் என்ன? ரசிகர்களுக்கு குஷி தான்

4 பெரும் வீரர்கள்

4 பெரும் வீரர்கள்

இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் கடைசியாக ரோகித் சர்மா, விராட் கோலி, ஷிகர் தவான், கே.எல்.ராகுல் ஆகிய 4 பேரும் மார்ச் 2021ம் ஆண்டு சேர்ந்து விளையாடினர். அதற்கு முன்பு என்று பார்த்துக்கொண்டால் 2020 ஜனவரி மாதம் தான். மொத்தமாக 15 போட்டிகள் தான். எனவே 2023ல் வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டரில் இவர்கள் நால்வரையும் அடக்குவதே பெரிய பிரச்சினையாக இருக்கலாம்.

ரிஷப் பண்ட்-க்கு ஆபத்து

ரிஷப் பண்ட்-க்கு ஆபத்து

தவான் - ரோகித் இருக்கும் போதெல்லாம் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் தான் ஜொலித்துள்ளார். எனவே வங்கதேச தொடரிலும் இப்படியே இருக்கும். விராட் கோலி 3வது இடத்தில் இருப்பார். ஒருவேளை இப்படி நடந்தால் 5வது இடத்தில் பந்துவீசக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் தேவை. அதன்படி பார்த்தால் ஸ்ரேயாஸ் ஐயர் தான் விளையாடுவார். ரிஷப் பண்ட்-ன் வாய்ப்பு பறிபோகும்.

 சாத்தியம் என்ன

சாத்தியம் என்ன

கே.எல்.ராகுல் துணைக் கேப்டன் என்பதால் அவரை ப்ளேயிங் 11ல் இருந்து நீக்குவது என்பது நடக்காத காரியமாகும். எனவே ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ரிஷப் பண்ட் போட்டி ஏற்படும். ஒருவேளை இந்தியாவுக்கு 6வது பவுலிங் ஆப்ஷன் தேவை என்றால் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட வேண்டும். 5 பவுலர்களே போதும் என நினைத்தால் பண்ட்க்கு வாய்ப்பை கொடுத்து ரிஸ்க் எடுப்பார்கள்.

போட்டி அட்டவணைகள்

போட்டி அட்டவணைகள்

இந்தியா - வங்கதேசம் அணிகளிடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் 4ம் தேதியன்று தொடங்கி டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதே போல 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் 14ம் தேதியன்று தொடங்கி டிசம்பர் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Story first published: Thursday, December 1, 2022, 16:47 [IST]
Other articles published on Dec 1, 2022
English summary
4 senior players makes trouble for Rishabh pant in India vs Bangladesh ODI series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X