For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்து டெஸ்ட்: இந்திய அணியின் சாதனை வெற்றிக்கு காரணங்கள் 7

By Veera Kumar

லண்டன்: இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் 28 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி சாதனை வெற்றி பெற முக்கியமான ஏழு காரணங்கள் உள்ளன. கிரிக்கெட் என்பது ஒரு கூட்டு முயற்சிக்குறிய விளையாட்டு. இதில் ஒவ்வொரு தருணமுமே முக்கியமானதுதான். இருப்பினும் அதி முக்கிய தருணங்கள் 7 இவைதான்.

ரகானே சதம்

ரகானே சதம்

பந்து வீச்சுக்கு சாதகமான முதல் இன்னிங்சில் 103 ரன்களை எடுத்து இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்ட உதவிய ரகானேவின் பேட்டிங் முதல் முக்கிய காரணம்.

புவனேஸ்வர் குமார் பேட்டிங்

புவனேஸ்வர் குமார் பேட்டிங்

முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்தியா, ரகானேவுக்கு கம்பெனி கொடுத்தபடி, புவனேஸ்வர் குமார் சேர்த்த 36 ரன்களால் மீண்டது.

பந்து வீச்சிலும் அசத்தல்

பந்து வீச்சிலும் அசத்தல்

முதல் இன்னிங்சில் 82 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமார் கைப்பற்றி அசத்தினார். பேட்டிங்கை தொடர்ந்து, பிரமாதமாக பவுலிங் செய்து தனது ஆல் ரவுண்ட் திறமையை பறைசாற்றினார்.

முரளி விஜய் முக்கிய காரணம்

முரளி விஜய் முக்கிய காரணம்

இரண்டாவது இன்னிங்சில் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 247 பந்துகளை சந்தித்து 95 ரன்களை குவித்தது அணியின் வெற்றிவாய்ப்புக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

ஜடேஜா பேட்டிங்

ஜடேஜா பேட்டிங்

இரண்டாவது இன்னிங்சில் மிடில் ஆர்டர் சரிந்தபோது, 57 பந்துகளில் 68 ரன்களை எடுத்து சரிவில் இருந்து மீட்டார் ரவீந்திர ஜடேஜா.

மீண்டும் புவனேஸ்வர் குமார்

மீண்டும் புவனேஸ்வர் குமார்

முதல் இன்னிங்சில் ரகானேவுக்கு கம்பெனி கொடுத்த புவனேஸ்வர்குமார், 2வது இன்னிங்சில் ஜடேஜாவுக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க தவறவில்லை. அரை சதமும் அடித்து அசத்தி இந்தியாவின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார்.

இஷாந்த் மாயாஜாலம்

இஷாந்த் மாயாஜாலம்

7வது காரணத்தை சொல்லவே தேவையில்லை. இஷாந்த் ஷர்மாவின் மாயாஜால பந்து வீச்சுதான் அந்த காரணம். காலையில் மந்தமாக இருந்த பந்து வீச்சு சாப்பாட்டை முடித்துவிட்டு வந்ததும் அதகளமாக மாறியது. ஷார்ட் பிட்ச் வகை பந்துகளை வீசி இங்கிலாந்தை திணறச் செய்து வெற்றியை பறித்தார் இஷாந்த் ஷர்மா.

Story first published: Wednesday, July 23, 2014, 9:58 [IST]
Other articles published on Jul 23, 2014
English summary
Above 7 reasons behind India's famous Test victory at Lord's.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X