For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாட்டா பைபை.. நாங்க கிளம்புறோம்.. தோனி முதல் ரஜத் பாட்டியா வரை.. விடைபெற்ற 8 வீரர்கள்

மும்பை : 2020இல் பல கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவித்து இருந்தனர்.

இந்த ஆண்டு மட்டும் தோனி முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் முக்கிய வீரராக இருந்த ரஜத் பாட்டியா வரை எட்டு வீரர்கள் ஓய்வு பெற்றனர்.

இவர்களில் தோனி, சுரேஷ் ரெய்னா ஒரே நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருந்தனர்.

தோனி

தோனி

ஒருநாள் கிரிக்கெட் போட்டியை மாற்றி அமைத்த பெருமைக்கு உரியவர் தோனி. அதிரடி ஆட்டத்துக்கு புதிய அடையாளம் கொடுத்தவர். அவரை பின்பற்றியே இன்று பல முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆடி வருகிறார்கள். அவரைப் போல பினிஷர் ஆக வேண்டும் என்பதே ஒவ்வொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனின் கனவு. அவர் 2020 ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்து பரபரப்பை கிளப்பினார். அவர் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் ஆட முடியும் என்றாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வை அறிவித்தார்.

இர்பான் பதான்

இர்பான் பதான்

இந்திய அணியில் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக வலம் வந்த இர்பான் பதான் நீண்ட காலமாக அணியில் இடமின்றி தவித்து வந்தார். இந்த நிலையில், அவர் வர்ணனை பணி மற்றும் பயிற்சியாளர் பணியை மேற்கொள்ளும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். லங்கா பிரீமியர் லீக் தொடரில் அவர் பங்கேற்றார்.

பிரக்யான் ஓஜா, சுதீப் தியாகி

பிரக்யான் ஓஜா, சுதீப் தியாகி

சச்சின் ஆடிய கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடியவர் பிரக்யான் ஓஜா. அந்தப் போட்டியில் அவர் 10 விக்கெட்கள் வீழ்த்திய போதும் அதன் பின் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற ரவீந்திர ஜடேஜா அணியின் முதன்மை சுழற் பந்துவீச்சாளராக மாறினார். அவரும், நான்கு ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் ஆடி உள்ளார் சுதீப் தியாகியும் தங்கள் ஓய்வை அறிவித்தனர்.

பார்த்திவ் பட்டேல்

பார்த்திவ் பட்டேல்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத வீரர் பார்த்திவ் பட்டேல். 16 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆகி, அதன் பின் தோனியிடம் தன் இடத்தை இழந்தவர். ஐபிஎல் தொடரிலும், உள்ளூர் போட்டிகளிலும் தீவிரமாக ஆடி வந்த அவர் 2020 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஓய்வை அறிவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு டேலன்ட் ஸ்கவுட் பணி அளித்துள்ளது.

வாசிம் ஜாபர்

வாசிம் ஜாபர்

இந்திய டெஸ்ட் அணியில் இரட்டை சதம் அடித்த துவக்க வீரர் வாசிம் ஜாபர். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் உள்ளூர் தொடரான ரஞ்சி ட்ராபியில் தொடர்ந்து ரன் குவித்து சாதனை படைத்தார். ரஞ்சி ட்ராபியில் அதிக ரன் குவித்த வீரர் அவர் தான். 12038 ரன்கள் குவித்துள்ள அவர், 40 சதம் அடித்துள்ளார்.

ரஜத் பாட்டியா

ரஜத் பாட்டியா

சர்வதேச போட்டிகளில் ஆடி இராத ரஜத் பாட்டியா உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த ஆல்-ரவுண்டராக அறியப்பட்டார். டெல்லி மாநில அணிக்காக ஆடிய அவர், ஐபிஎல் தொடரிலும் தன் முத்திரையை பதித்தார். 2012இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி இருந்தார். தற்போது கிரிக்கெட் வர்ணனை செய்து வரும் அவர் ஓய்வை அறிவித்தார்.

Story first published: Friday, January 1, 2021, 17:40 [IST]
Other articles published on Jan 1, 2021
English summary
8 Cricket players retired in 2020 including Dhoni and Suresh Raina
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X