For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க நல்லா விளையாண்டோம்… ஜெயிச்சோம்… இந்தியாவை குத்தி காட்டிய ஆரோன் பின்ச்

Recommended Video

வெற்றி தோல்வி பற்றி கேப்டன்கள் என்ன சொல்கிறார்கள்- வீடியோ

ராஞ்சி: சிறப்பாக விளையாடியதால் தான் இந்தியாவுக்கு எதிரான ராஞ்சி போட்டியில் வெற்றி பெற முடிந்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.

ராஞ்சியில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் ஆஸ்திரேலிய அணி பின்ச் - கவாஜாவின் அபார ஆட்டத்தால், 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கவாஜா 104 ரன்களும், பிஞ்ச் 93 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணித்தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியளித்தனர்.

இதுதான் பிரச்னை.. அதனால தான் ராஞ்சி போட்டியில் தோற்றோம்... கேப்டன் கோலி சொல்லும் காரணம் இதுதான் பிரச்னை.. அதனால தான் ராஞ்சி போட்டியில் தோற்றோம்... கேப்டன் கோலி சொல்லும் காரணம்

மிரட்டலான பந்துவீச்சு

மிரட்டலான பந்துவீச்சு

தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ரோஹித் சர்மா மற்றும் ராயுடு ஆகியோர் ஆஸ்திரேலியாவின் மிரட்டலான பந்துவீச்சுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ரசிகர்களின் ஆரவாரத்துடன் களமிறங்கிய உள்ளூர் நாயகனான தோனியும், 26 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

கோலி சதம்

கோலி சதம்

மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கோலி, தனது 41-வது சதத்தை பதிவு செய்தார். இருப்பினும்,போட்டியில் இந்தியா தோற்றுபோனது. தொடரின் முதல் வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்தது.

ஆரோன் பின்ச் பேட்டி

ஆரோன் பின்ச் பேட்டி

இந்த வெற்றி குறித்து ஆஸி. கேப்டன் ஆரோன் பின்ச் கூறியதாவது:எங்கள் வீரர்கள் மிக சிறப்பாக விளையாடினர். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமே எங்களால் 300 ரன்களை தாண்ட முடிந்தது.

சிறப்பாக விளையாடினோம்

சிறப்பாக விளையாடினோம்

பேட்டிங்கில் மட்டுமல்ல பந்துவீச்சிலும் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டதாக உணர்கிறேன். மேக்ஸ்வெல், கவாஜா ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடினர்.

கடுமையான உழைப்பு

கடுமையான உழைப்பு

எனது விளையாட்டை முன்னேற்றி கொள்ள நான் கடுமையாக உழைத்து உள்ளேன். அதற்காக நான் கடும் பயிற்சிகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன்.

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன்

அதற்கு சரியான பலன் கிடைத்தது என்று நினைக்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளிலும் இதே போன்று சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்று கூறினார்.

Story first published: Saturday, March 9, 2019, 11:41 [IST]
Other articles published on Mar 9, 2019
English summary
Aaron Finch lauds team effort post victory at Ranchi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X