For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வரும் கண்டிப்பா வாய்ப்பு வரும்.. ரொம்ப நம்பிக்கையா சொல்றாரே ஜம்பா தம்பி!

சிட்னி: ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஜம்பாவுக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பைத்தான் அவர் இவ்வளவு நம்பிக்கையாக சொல்கிறார்.

நியூசவுத்வேல்ஸ் அணியில் இணைந்து ஆடி வரும் ஜம்பா தற்போது டெஸ்ட் போட்டிக்கான அழைப்புக்காக ஆவலுடன் காத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர் நாதன் லயனுடன் இணையும் நாளுக்காக தான் காத்திருப்பதாகவும் அவர் சொல்லியுள்ளார்.

28 வயதான ஜம்பா, நியூ சவுத் வேல்ஸ் அணியில் இணைந்து இந்த சீசனில் ஆடவுள்ளார். அதிக முதல் தரப் போட்டிகளில் ஆடி டெஸ்ட் போட்டியில் நுழைய தான் ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் ஜம்பா கூறியுள்ளார்.

இப்பப் போய் அதெல்லாம்.. சான்ஸே இல்லை.. என்ன இப்படி சொல்லிட்டாங்கஇப்பப் போய் அதெல்லாம்.. சான்ஸே இல்லை.. என்ன இப்படி சொல்லிட்டாங்க

ஆர்வத்தில் ஜம்பா

ஆர்வத்தில் ஜம்பா

இதுகுறித்து ஜம்பா கூறுகையில், டெஸ்ட் போட்டியில் ஆடுவதுதான் எனது ஆசை. அதை சில்லி என்று கூறி விட முடியாது. நாதன் என்னை அங்கீகரித்து விட்டார். அவருடன் இணைந்து ஆடுவது எனது கனவு. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு என்னால் சாலிடான ஆட்டத்தைக் கொடுக்க முடியும். நீங்கள் ஒரு நல்ல ஸ்பின்னராக இருந்தால் நிச்சயம் நாதனுடன் இணைந்து விளையாடவே விரும்புவீர்கள். அவருடன் மேலும் நெருங்கி பணியாற்ற விரும்புகிறேன் என்றார் அவர்.

லயனுடன் இணைய விருப்பம்

லயனுடன் இணைய விருப்பம்

தற்போது நாதன் லயன் நியூ சவுத்வேல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். அதை மனதில் கொண்டுதான் ஜம்பாவும் இந்த அணிக்கு வந்துள்ளார். ஜம்பா இந்த அணிக்கு வர நியூ சவுத்வேல்ஸ் அணி பயிற்சியாளர் பில் ஜேக்கஸும் ஒரு காரணம். ஜேக்கஸை ரொம்ப காலமாக ஜம்பாவுக்குத் தெரியும். அவருடன் கடந்த 15 வருடமாக அவர் பழகி வருகிறார். தனக்கு எது நல்லது என்பதை ஜேக்கஸ் அறிவார் என்றும் ஜம்பா கூறுகிறார்.

வார்னர் - ஸ்மித்துடன் இணைய ஆர்வம்

வார்னர் - ஸ்மித்துடன் இணைய ஆர்வம்

அதை விட முக்கியமாக நாதனுடன் இணைந்து விளையாடுவதன் மூலம் தனக்கு நல்ல அனுபவம் கிடைக்கும் என்பதே ஜம்பாவின் முக்கிய காரணம். 2012ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார் ஜம்பா. பாட் கமின்ஸ், ஜோஸ் ஹேஸல்வுட், ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், டேவிட் வார்னர் போன்றோருடன் இணைந்து வரும் நாட்களில் ஆடவுள்ளார். முதல் தர போட்டிகளில் மேலும் ஜொலிக்கும் வகையில் தான் மெருகேறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த சில ஆண்டுகள்

அடுத்த சில ஆண்டுகள்

அடுத்த சில ஆண்டுகள் நல்ல விளையாட்டு விளையாட ஆர்வமாக உள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு நான் இருந்ததை விட இப்போது மேம்பட்டுள்ளேன். நிறையவே மாறியுள்ளேன். எனது ஆட்டமும் மேம்பட்டுள்ளது. அதிக போட்டிகளில் ஆடியிருந்தாலும் டெஸ்ட் போட்டி என்பது பெருமையானது, முக்கியமானது. எனவே காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜம்பா.

Story first published: Tuesday, June 16, 2020, 17:40 [IST]
Other articles published on Jun 16, 2020
English summary
Australia spinner Adam Zampa dreaming of earning the coveted 'Baggy Green' after moving back to New South Wales
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X