For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேட்ச் பிடிக்கத் தெரியாத இலங்கை.. ஆப்கானிஸ்தான் அபார பேட்டிங்.. ஆசிய கோப்பை ஹைலைட்ஸ்

துபாய் : ஆசிய கோப்பை தொடரின் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் வென்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற நிலையில் இருந்த இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து ஆசிய கோப்பை தொடரை விட்டே வெளியேறியுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இலங்கையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Afganisthan register their first ever victory against SL


நேற்றைய போட்டியின் ஹைலைட்ஸ் இதோ

1 ஆப்கானிஸ்தானின் சிறந்த தொடக்கம்

டாஸில் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். முகமத் ஷாஷாத் 34 ரன்களையும்,இஷனுல்லா 45 ரன்களையும் எடுத்தனர். முதலாவது விக்கெட்டிற்கு ஆப்கானிஸ்தான் அணி 57 ரன்களை எடுத்தது.

2 ரஹ்மத் ஷாவின் அபார அரைசதம்

ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஹ்மத் ஷா அபாரமாக விளையாடி 72 ரன்களை குவித்தார். அவர் ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் 15ஆவது அரைசதம் இதுவாகும். ஆப்கானிஸ்தான் வீரர்களில் அதிக அரைசதங்கள் அடித்த இரண்டாவது வீரர் இவரே.

3 5 விக்கெட் வீழ்த்திய திசாரா பெரேரா

இலங்கை அணியின் ஆல் ரௌண்டர் திசாரா பெரேரா சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். இவர் ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்துவது இது நான்காவது முறையாகும்.

4 இலங்கையின் மோசமான பீல்டிங்

ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது இலங்கை அணி வீரர்கள் நிறைய கேட்ச்களை கோட்டை விட்டனர். அவர்கள் தங்களது முதலாவது போட்டியின்போதும் இதே தவறை செய்து வங்கதேச அணிக்கெதிராக தோல்வியை தழுவியதும் குறிப்பிடத்தக்கது.

5 அசத்திய ஆப்கானிஸ்தானின் சுழல்

மூன்று முன்னணி சுழல்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய ஆப்கான் அணி,இலங்கை அணியை தனது சுழல் பந்துவீச்சில் கட்டுப்படுத்தியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே குசால் மெண்டிஸ்,முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். முஜீப்,நபி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.



Story first published: Tuesday, September 18, 2018, 9:12 [IST]
Other articles published on Sep 18, 2018
English summary
Afganisthan register their first ever victory against SL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X