For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆப்கன் கிரிக்கெட் வீரருக்கு 6 ஆண்டு தடை.. சைலன்ட்டாக செய்த தில்லாலங்கடி வேலைகள் அம்பலம்!

காபூல் : ஆப்கானிஸ்தான் தேசிய அணி வீரரான ஷபிகுல்லா ஷபிக்-குக்கு ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் ஆட தடை விதித்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு.

Recommended Video

Shafiqullah Shafiq banned for 6 years | ஆப்கன் கிரிக்கெட் வீரருக்கு 6 ஆண்டு தடை

ஷபிகுல்லா ஷபிக் ஆப்கானிஸ்தான் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடியவர்.

அவருக்கு தொடர்ந்து போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத நிலையில் உள்ளூர் போட்டிகளிலும், டி20 தொடர்களிலும் பங்கேற்று வந்தார்.

நீச்சல் குளத்தில் கண்ணீர் விட்டு அழுத நியூசி. வீரர்கள்.. அதிர வைத்த காட்சி.. மனம் திறந்த இன்சமாம்!நீச்சல் குளத்தில் கண்ணீர் விட்டு அழுத நியூசி. வீரர்கள்.. அதிர வைத்த காட்சி.. மனம் திறந்த இன்சமாம்!

மேட்ச் பிக்ஸிங் அம்பலம்

மேட்ச் பிக்ஸிங் அம்பலம்

அவர் மேட்ச் பிக்ஸிங் செய்ததும், ஒருமுறை செய்ய முயற்சி செய்ததும் அம்பலம் ஆகி உள்ளது. அது குறித்த விசாரணைக்கும் அவர் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் ஆட தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது ஆப்கன் கிரிக்கெட் போர்டு.

மேட்ச் பிக்ஸிங்

மேட்ச் பிக்ஸிங்

கிரிக்கெட் வீரர்கள் கடந்த 20 ஆண்டுகளாகவே மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கி வருகின்றனர். அதிலும் ஐபிஎல் போன்ற டி20 லீக் தொடர்கள் உலகம் முழுவதும் அதிகரிக்கத் துவங்கிய பின் மேட்ச் பிக்ஸிங் பிரச்சனை உச்சத்தை எட்டி உள்ளது.

அணியில் வாய்ப்பு இல்லை

அணியில் வாய்ப்பு இல்லை

ஷபிகுல்லா ஷபிக் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் 2009ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன அவருக்கு அணியில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. 24 ஒருநாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார்.

இரண்டு தொடர்களில் சிக்கினார்

இரண்டு தொடர்களில் சிக்கினார்

டி20 லீக் தொடர்களில் பங்கேற்று வந்த அவர் இரண்டு தொடர்களில் மேட்ச் பிக்ஸிங் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 2018 ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் டி20 தொடரில் மேட்ச் பிக்ஸிங் செய்துள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. அதே போல, மற்றொரு தொடரில் அணி வீரர் ஒருவரை மேட்ச் பிக்ஸிங் செய்ய அணுகி இருக்கிறார்.

அதிகாரி என்ன சொன்னார்?

அதிகாரி என்ன சொன்னார்?

ஆறு ஆண்டுகள் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரி இதுபற்றி பேசினார். "இது மிக தீவிரமான குற்றம். ஒரு மூத்த தேசிய அணி வீரர் முக்கியமான உள்ளூர் போட்டியில் 2018 ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் டி20 தொடரில் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்" எனக் கூறினார்.

மற்றொரு வீரரை வீழ்த்த முயற்சி

மற்றொரு வீரரை வீழ்த்த முயற்சி

மேலும், "2019 பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் சக வீரரை குற்றச் செயலில் ஈடுபட அழைத்து அதில் தோல்வி அடைந்துள்ளார்" என அவர் மீதான மற்றொரு புகாரையும் கூறினார். ஈரான் இரண்டு புகார்கள் மீதும் சேர்த்து அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு இல்லை

ஒத்துழைப்பு இல்லை

ஷபிகுல்லா ஷபிக் முதலில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. குற்றத்தை ஒப்புக் கொள்ளவும் மறுத்துள்ளார். அதனால், அவருக்கு இன்னும் அதிக தண்டனை கூட வழங்கி இருக்க முடியும் என அந்த அதிகாரி கூறினார்.

மற்ற வீரர்களுக்கு எச்சரிக்கை

மற்ற வீரர்களுக்கு எச்சரிக்கை

மேலும், குற்றத்தில் ஈடுபட்டு அதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு கண்டுபிடிக்காது என நினைத்துக் கொண்டு இருக்கும் ஆப்கன் கிரிக்கெட் வீரர்களுக்கு இது விழிக்க வேண்டிய தருணம் எனவும் அந்த அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Story first published: Monday, May 11, 2020, 11:06 [IST]
Other articles published on May 11, 2020
English summary
Afghanistan’s Shafiqullah Shafiq banned for 6 years after breaching anti corruption code.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X