For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தன் கடைசி போட்டியில் சதம் விளாசிய அலஸ்டர் குக்.. மறக்க முடியாத போட்டி இதுதான்

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து இடையே ஆன ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தன் கடைசி போட்டியில் ஆடி வரும் அலஸ்டர் குக் சதம் விளாசி தன் கடைசி போட்டியை மறக்க முடியாத போட்டியாக மாற்றியுள்ளார்.

இந்தியா தொடரை இழந்துவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்போடு இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

அதே சமயம் தங்கள் அணியின் சிறந்த வீரர் அலஸ்டர் குக்கின் கடைசி போட்டியில் வெற்றி பெற்று அவரை மகிழ்விக்க வேண்டி இங்கிலாந்தும் மும்முரமாக ஆடி வருகிறது.

முதல் இன்னிங்க்ஸ் என்னாச்சு?

முதல் இன்னிங்க்ஸ் என்னாச்சு?

முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து 332 ரன்கள் குவித்தது. அதில் அலஸ்டர் குக் 71 ரன்கள் அடித்தார். மொயீன் அலி 50, பட்லர் 89 ரன்கள் அடித்து அணிக்கு உதவினர். அடுத்து ஆடிய இந்தியா தட்டுத்தடுமாறி 292 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 86, ஹனுமா விஹாரி 56 ரன்கள் எடுத்து இந்திய அணியை பெரும் சரிவில் இருந்து மீட்டனர்.

திணறும் இந்தியா

திணறும் இந்தியா

அடுத்து ஆடிய இங்கிலாந்தில் ஜென்னிங்க்ஸ், மொயீன் அலி விரைவாக வெளியேறிய நிலையில் அலஸ்டர் குக், கேப்டன் ஜோ ரூட் இணைந்து வலுவான கூட்டணி அமைத்துள்ளனர். இவர்களை வெளியேற்ற முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

எப்படி கிடைத்தது கடைசி சதம்?

எப்படி கிடைத்தது கடைசி சதம்?

நிதானமாக ஆடிய அலஸ்டர் குக் சதம் அடித்துள்ளார். அவர் 213 பந்துகளில் 101 ரன்கள் எட்டி தன் சதத்தை நிறைவு செய்தார். ஜடேஜா வீசிய பந்தை அடித்தார் குக். அந்த பந்தை பிடித்த பும்ரா ஓவர் த்ரோ செய்ததால் பந்து பவுண்டரிக்கு சென்றது. இதை அடுத்து குக்குக்கு ஐந்து ரன்கள் வழங்கப்பட்டது. இப்படி தான் அலஸ்டர் குக் தன் கடைசி போட்டியில் சதத்தை எட்டினார்.

அலஸ்டர் குக் இதுவரை..

அலஸ்டர் குக் இதுவரை..

அலஸ்டர் குக் இந்த கடைசி சதத்தோடு சேர்த்து 33 சதங்கள் அடித்துள்ளார். இது தவிர 57 அரைசதங்கள், 5 இரட்டை சதங்கள் அடித்துள்ளார் குக். ஐந்தாவது போட்டியை பொறுத்தவரை, தற்போது குக் மற்றும் ஜோ ரூட் வலுவாக களத்தில் நின்றுள்ளனர். ஜோ ரூட் 92 ரன்கள் குவித்து சதத்தை நெருங்கியுள்ளார். இங்கிலாந்து 243 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது. 283 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

Story first published: Monday, September 10, 2018, 18:23 [IST]
Other articles published on Sep 10, 2018
English summary
Alastair Cook hit century in his last innings in a international match. Indian bowlers struggling to get wickets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X