For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நெஞ்சுவலி வராம காப்பாத்திய பும்ராவுக்கு அலஸ்டர் குக் நன்றி.. அப்படி என்னப்பா செஞ்சாரு?

லண்டன் : தன் கடைசி டெஸ்டில் ஆடி வரும் அலஸ்டர் குக், நேற்று சதம் அடித்து அசத்தினார். தான் சதம் அடிக்க உதவிய பும்ராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அவர்.

நேற்று அலஸ்டர் குக் மற்றும் ஜோ ரூட் வலுவான நிலையில் ரன் குவித்து வந்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்பட்டத்த முடியாமல் தவித்து வந்தனர்.

அலஸ்டர் குக் மற்றும் ஜோ ரூட் இருவரும் சதம் அடித்தனர். அலஸ்டர் குக் சதம் அடித்த போது நடந்த ஒரு சம்பவத்துக்கு தான் பும்ராவுக்கு நன்றி சொல்லியுள்ளார்.

அலஸ்டர் குக் நிலை

அலஸ்டர் குக் நிலை

நேற்று தன் கடைசி இன்னிங்க்ஸில் ஆடி வந்த அலஸ்டர் குக், அரைசதம் அடித்து நிதானமாக ஆடி வந்தார். முதல் இன்னிங்க்ஸிலும் அரைசதம் அடித்து இருந்தார். இந்த முறை அரைசதத்தை சதமாக மாற்றுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குக் 96 ரன்கள் அடித்து ஆடி வந்தார். மொத்த அரங்கமும் அவர் எப்போது சதம் அடிப்பார் என ஆவலோடு காத்திருந்தது.

ஒன்று ஐந்தானது

ஒன்று ஐந்தானது

அலஸ்டர் குக் அப்போது பந்தை தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது, பந்தை பிடித்த பும்ரா வேகமாக வீசினார். ஆனால், பந்து ஆளில்லாத பகுதியில் ஓடி, பவுண்டரியை அடைந்தது. ஜடேஜா பந்தை பிடிக்க முயன்றாலும், அவர் அதிக தூர இடைவெளியில் இருந்ததால், குக் பவுண்டரி செல்லும் முன்பே கொண்டாட துவங்கிவிட்டார். 96 ரன்களில் இருந்து ஒரு ரன் ஓடப் போன குக், இப்போது 5 ரன்கள் பெற்றார்.

பும்ராவுக்கு நன்றி

பும்ராவுக்கு நன்றி

இது பற்றி பேசிய குக், "அவர் செய்த ஓவர்த்ரோ என் நெஞ்சுவலியை குறைத்துவிட்டது. பும்ரா கூட இந்த தொடரில் எனக்கு நிறைய நெஞ்சு வலியை கொடுத்தார். ஆனால், நேற்று அந்த சில கணங்களை எனக்காக அவர் கொடுத்தார். அவருக்கு என் நன்றிகள்" என கூறினார்.

தடுமாறும் இந்தியா

தடுமாறும் இந்தியா

இந்தியா தற்போது 400 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியுள்ளது. 58 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்து வரும் இந்திய அணி, இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ளதால், வெற்றி பெறுவது மிக மிக கடினம் என்றே கருதப்படுகிறது.

Story first published: Tuesday, September 11, 2018, 14:14 [IST]
Other articles published on Sep 11, 2018
English summary
Alastair Cook says thanks to bumrah for overthrow which brought his last century
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X