நூற்றாண்டின் சிறந்த பவுலிங் இதுதான்.. ஆஸி. வீராங்கனைைய பார்த்து வாய் பிளக்கும் கிரிக்கெட் உலகம்

Posted By:

மெல்போர்ன்: லெக் ஸ்பின் பவுலிங்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகம் எப்போதுமே சிறந்து விளங்கும். இதுவரை ஆண்கள் அணியில் மட்டும் சிறந்த லெக் ஸ்பின்னர்களை கொண்டு இருந்த ஆஸ்திரேலியா தற்போது பெண்கள் அணியிலும் ஒரு வரத்தை பெற்று இருக்கிறது.

ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் லெக் ஸ்பின் பவுலர் ஒருவர் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பந்தை வீசியதாக பாராட்டப்பட்டுள்ளார். மேலும் இவர்தான் அடுத்த ஷேன் வார்னே எனவும் பாராட்டப்படுகிறார்.

அமண்டா ஜேட் வெல்லிங்டன் என்ற அந்த பெண் செய்த பவுலிங் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் பவுலிங் போலவே இருப்பதாக கூறப்படுகிறது.

 கிரிக்கெட்டின் தி பால் ஆப் தி செஞ்சுரி

கிரிக்கெட்டின் தி பால் ஆப் தி செஞ்சுரி

ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் 1993ல் நடத்த ஆஷஸ் தொடரில் ஷேன் வார்னே மிகச்சிறப்பான விக்கெட் ஒன்றை எடுத்தார். அந்த விக்கெட்டில் ஸ்டெம்பில் இருந்த மைக் உடைந்து விழுந்தது. கிரிக்கெட் வரலாற்றில் இன்று வரை அதுதான் ''தி பால் ஆப் தி செஞ்சுரி'' என்ற பட்டத்தை பெற்று இருக்கிறது.

 கலக்கும் அமண்டா ஜேட் வெல்லிங்டன்

கலக்கும் அமண்டா ஜேட் வெல்லிங்டன்

தற்போது ஷேன் வார்னேவை மிஞ்சும் அளவுக்கு ஆஸ்திரேலியாவின் பெண் அணியில் இருக்கும் ஸ்பின் பவுலர் பந்து வீசி இருக்கிறார். அமண்டா ஜேட் வெல்லிங்டன் என்ற அந்த பெண் வீசிய பந்தில் நடு ஸ்டெம்பில் இருந்த மைக் பறந்து சென்று உடைந்து இருக்கிறது.

இவர்தான் ஷேன் வார்னே

தற்போது இந்த பந்துதான் தி பால் ஆப் தி செஞ்சுரி என அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இதை டிவிட்டரில் ஷேர் செய்து இருக்கிறது. இவர் போடும் பந்து அப்படியே ஷேன் வார்னே போடுவதை போலவே இருக்கிறது. இவர்தான் கிரிக்கெட் உலகின் அடுத்த ஷேன் வார்னே என்ற புகழை எட்டியிருக்கிறார்.

அமண்டாவுக்கு குவியும் பாராட்டு

இவரது பவுலிங்கை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது இவர் மீது பித்து பிடித்து இருக்கின்றனர். இவர் பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்கள் அணிக்கும் பெரிய சவாலாக இருப்பார் என்று கூறப்படுகிறது. சிலர் இன்னும் மேலே போய் இவர் மோசமாக விளையாடும் ஆண்கள் அணிக்கு கிரிக்கெட் விளையாட கற்றுத்தருவார் என்றும் கூறுகின்றனர்.

Story first published: Wednesday, November 15, 2017, 13:43 [IST]
Other articles published on Nov 15, 2017
Please Wait while comments are loading...