For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மெக்கிராத்தின் அதிக விக்கெட் சாதனையை முந்த கடைசி நொடி வரை தவித்த ஆண்டர்சன்

லண்டன் : ஆண்டர்சன் மெக்கிராத்தை விட அதிக விக்கெட்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டின், மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என்ற அடையாளத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து தொடர் நடந்து வந்த போது, மெக்கிராத்தின் டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்கள் எண்ணிக்கையை நெருங்கினார் ஆண்டர்சன்.

நான்காம் டெஸ்டில் அவர் அதை முந்துவாரா என எதிர்பார்த்த நேரத்தில், அவரால் முடியவில்லை. ஐந்தாம் டெஸ்டில் கடைசி நொடியில் தான் அவரால் அந்த சாதனையை செய்ய முடிந்தது.

கடைசி நொடி

கடைசி நொடி

ஆண்டர்சன் ஐந்தாம் டெஸ்டில் ஐந்து விக்கெட்கள் எடுத்தால் மெக்கிராத் சாதனையை முறியடிக்கலாம் என்ற நிலை இருந்தது. முதல் இன்னிங்க்ஸில் 2 விக்கெட்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாம் இன்னிங்க்ஸில் தவான், புஜாரா விக்கெட்டை எடுத்து மெக்கிராத் சாதனையை சமன் செய்தார். அடுத்த ஒரு விக்கெட் எடுக்க திணறிய அவர், இந்தியாவின் கடைசி விக்கெட்டான முஹம்மது ஷமி விக்கெட்டை எடுத்து, டெஸ்ட் போட்டி வெற்றியோடு, தன் சாதனையையும் கொண்டாடினார்.

மெக்கிராத் எவ்வளவு?

மெக்கிராத் எவ்வளவு?

ஆஸ்திரேலியாவின் மெக்கிராத் தான் வேகப் பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையை பெற்று இருந்தார். அவர் 124 டெஸ்ட்களில், 563 விக்கெட்கள் எடுத்தார். தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 143 போட்டிகளில் அந்த சாதனையை முறியடித்து 564 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியல்

அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியல்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் 800, ஷேன் வார்னே 708, அனில் கும்ப்ளே 619, ஆண்டர்சன் 564 மற்றும் மெக்கிராத் 563 விக்கெட்கள் வீழ்த்தி முதல் ஐந்து இடத்தில் இருக்கின்றனர். இதில் முதல் மூன்று பேரும் சுழல் பந்துவீச்சாளர்கள்.

அடுத்து யார்?

அடுத்து யார்?

அதிக விக்கெட் சாதனையை அடுத்து நெருங்கும் வகையில் இருக்கும் ஒரே வீரர் இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராடு தான். அவர் 433 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். அதே போல ஆண்டர்சன், அனில் கும்ப்ளேவின் 619 விக்கெட்கள் சாதனையை வீழ்த்த ஓரளவு வாய்ப்புள்ளது. எனினும், முரளிதரன், வார்னே அருகில் இனி ஒருவரும் செல்ல முடியாது என்பதும் தெளிவாக தெரிகிறது.

Story first published: Wednesday, September 12, 2018, 12:12 [IST]
Other articles published on Sep 12, 2018
English summary
Anderson beat McGrath’s wickets in test cricket, after he took 564 wickets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X