For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்பஜனால் குடிகாரன் ஆனேன்.. வாழ்க்கையே முடிஞ்சு போச்சு.. சைமண்ட்ஸின் அதிர்ச்சிக் கதை

சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஹர்பஜன் உடன் 2008இல் சிட்னி டெஸ்டில் ஏற்பட்ட சர்ச்சை தன் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது எனவும், தான் மதுவுக்கு அடிமை ஆகி கிரிக்கெட் வாய்ப்புக்களை இழந்ததாகவும் கூறியுள்ளார்.

2007-08ஆம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அந்த தொடர் முழுவதும் ஹர்பஜன் , சைமண்ட்ஸ் இடையே நடைபெற்ற சர்ச்சை தொடர்ந்தது.

பல்வேறு விசாரணைகள், ஊடகங்களின் பல்வேறு பார்வைகள், இருநாட்டு ரசிகர்கள் இடையே வாக்குவாதங்கள் என அந்த தொடர் வேறு சாயம் பூசப்பட்டு நடந்து முடிந்தது.

அணியில் இருந்து நீக்கம்

அணியில் இருந்து நீக்கம்

அந்த சம்பவத்துக்கு பின் சைமண்ட்ஸ் அதிகம் குடிக்கத் துவங்கியதாகவும், அதனால், பலமுறை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் எச்சரிக்கப்பட்டு பின்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். அன்று சிட்னி டெஸ்டில் என்ன நடந்தது என சைமண்ட்ஸ் கூறினார்.

வம்பிழுத்த சைமண்ட்ஸ்

வம்பிழுத்த சைமண்ட்ஸ்

சிட்னி டெஸ்டில் சச்சினும், ஹர்பஜனும் பேட்டிங் செய்து கொண்டு இருந்தனர். அப்போது சைமண்ட்ஸ், "இங்கே பார் **ஹெட். நாம் இங்கே நண்பர்களாக இருக்க வரவில்லை. உனக்கு இங்கே காயம் ஏற்படப் போகிறது" என கூறி வம்பிழுத்து இருக்கிறார்.

பதிலடி கொடுத்த ஹர்பஜன்

பதிலடி கொடுத்த ஹர்பஜன்

பதிலுக்கு ஹர்பஜன், "நீ வெறும் குரங்கு" என இரண்டு அல்லது மூன்று முறை தெரிவித்தார் என கூறுகிறார் சைமண்ட்ஸ். அப்போது ஹர்பஜன் கூறியதை வேறு சில ஆஸ்திரேலிய வீரர்களும் கேட்டதாகவும், அதனால், ரிக்கி பாண்டிங் இதுபற்றி புகார் அளித்துள்ளார். பின்னர், ஹர்பஜனுக்கு மூன்று போட்டிகள் தடை விதித்தனர். பின்னர், அது நீக்கப்பட்டு அபராதம் மட்டும் செலுத்தினார்.

அழுத்தமும், வருத்தமும்

அழுத்தமும், வருத்தமும்

எனினும், இந்த நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் விசாரணைக்கு உள்ளாகினர். இதை பார்த்து மனமுடைந்து போனதாக கூறி இருக்கிறார் சைமண்ட்ஸ். தன் பிரச்னையில் தேவையில்லாமல், தன் சக வீரர்களை இழுத்து விட்டதால் கடும் அழுத்தம் ஏற்பட்டு, வருத்தமடைந்து குடிக்க ஆரம்பித்ததாக கூறி இருக்கிறார். தான் இந்த விவகாரத்தை தவறாக கையாண்டு விட்டதாக வருத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்ட ஹர்பஜன்

மன்னிப்பு கேட்ட ஹர்பஜன்

எனினும், அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சைமண்ட்ஸ், ஹர்பஜன் இருவரும் ஒன்றாக ஆடினர். அப்போது, ஹர்பஜன், சைமண்ட்ஸ் அருகே வந்து தான் சிட்னி டெஸ்டில் நடந்து கொண்ட முறைக்காக மன்னிப்பு கேட்டதாகவும் கூறி இருக்கிறார் சைமண்ட்ஸ். சைமண்ட்ஸ் நீண்ட நாட்கள் கழித்து இந்த சர்ச்சை குறித்து பேசி இருப்பதும், இந்த சர்ச்சையால் தான் தன் கிரிக்கெட் வாழ்வு தடம் புரண்டது எனவும் கூறி இருப்பது அதிர்ச்சியாகவே உள்ளது. இதற்கு ஹர்பஜன் ஏதும் பதில் சொல்வாரா?

Story first published: Sunday, November 4, 2018, 16:39 [IST]
Other articles published on Nov 4, 2018
English summary
Andrew Symonds talked about his downfall after monkeygate involving Harbhajan singh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X