For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவர் பதவி ஏற்க தயார்- கவாஸ்கர்

By Mathi

டெல்லி: உச்சநீதிமன்ற பரிந்துரைப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இடைக்கால தலைவராக பதவியேற்க தாம் தயார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். பிக்ஸிங் தொடர்பான முத்கல் கமிட்டி மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பட்நாயக் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக கவாஸ்கர் அல்லது மூத்த அனுபவம் வாய்ந்த வீரர் ஒருவரை நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

As an opener ready for any role: Gavaskar

அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கவும் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர், உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வரை பொறுமையாக இருப்போம். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு தொடக்க வீரர்.. எந்த ஒரு சவாலையும் ஏற்க நான் தயாரக இருக்கிறேன்.. என்று கூறியுள்ளார்.

Story first published: Thursday, March 27, 2014, 15:35 [IST]
Other articles published on Mar 27, 2014
English summary
Former India captain and legendary batsman Sunil Gavaskar said Thursday he was ready to become interim president of the Board of Control for Cricket in India (BCCI) as proposed by the Supreme Court.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X