For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சாதனையாளருக்கு வாய்ப்பு இல்லையாம்”.. புறகணிக்கப்பட்ட ஷிகர் தவான்.. அஸ்வின் சரமாரி கேள்வி!

சென்னை: இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் ரசிகர்களின் ஆதரவுடன் ஜொலித்து வரும் சூழலில் ஒரே ஒரு வீரர் மட்டும் சத்தமே இல்லாமல் சாதித்தும் வாய்ப்பின்றி இருக்கிறார் என அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தற்போது 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்த தொடர் இந்தியாவில் அக்டோபரில் நடக்கும் எனத்தெரிகிறது.

இதற்கான திட்டங்களில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், சுப்மன் கில், ஹூடா, என பல இளம் வீரர்கள் சேர்ந்துள்ள சூழலில், இந்தியாவுக்காக நீண்ட வருடங்களாக உதவி வந்த ஷிகர் தவான் எங்கு சென்றார் எந்த அளவிற்கு மறைந்துவிட்டார்.

“நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா”.. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்! “நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா”.. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!

தவானின் இன்னிங்ஸ்

தவானின் இன்னிங்ஸ்

கடந்த 2022ம் ஆண்டு இந்திய அணி 24 ஒருநாள் போட்டிகளை விளையாடியது. இதில் ஷிகர் தவான் 22 போட்டிகளில் விளையாடியிருந்தார். இந்தியாவின் முழு நேர கேப்டனான ரோகித் சர்மாவே 8 போட்டிளில் தான் வழிநடத்திய சூழலில், தவான் 9 போட்டிகளில் கேப்டன் பதவியேற்றார். இந்த 22 போட்டிகளில் அவர் 688 ரன்களை குவித்தார். அவரின் சராசரி 34 ரன்களாக இருந்து.

மோசமான ஆண்டு

மோசமான ஆண்டு

ஆனால் 2023ம் ஆண்டில் இந்திய அணியில் சேர்ப்பதற்கு கூட ஷிகர் தவானின் பெயர் பரிந்துரைக்கப்படாமல் உள்ளது. இதற்கு காரணம் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவர் தான். எதிர்கால திட்டம் எனக்கூறி தவானை புறகணித்து வருகின்றனர். அதற்கேற்றார் போலவே அந்த இரண்டு வீரர்களும் இரட்டை சதம் அடித்து தேர்வுக்குழுவை வியக்கவைத்தனர்.

அஸ்வின் அதிருப்தி

அஸ்வின் அதிருப்தி

இந்நிலையில் இதுகுறித்து அஸ்வின் பேசியுள்ளார். அதில், கடந்த காலங்களில் இந்தியாவுக்கு சிக்கல் என்பது டாப் 3 வீரர்கள் சரிந்தால் மட்டுமே இருந்தது. ரோகித் சர்மா, விராட் கோலி குறித்து நிறைய பேசுகிறோம், ரசிகர்களும் கொண்டாடுகின்றனர். ஆனால் ஷிகர் தவான் சத்தமே இல்லாமல் பணியை முடித்துவிட்டு சென்றுக்கொண்டே இருப்பார். இந்திய அணியில் அவரின் இடம் வெற்றிடமாக மாறுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

அடுக்கடுக்கான கேள்வி

அடுக்கடுக்கான கேள்வி

இஷான் போன்று ஒரு வீரர் இரட்டை சதம் அடித்துவிட்டார் என்பதற்காக தொடர்ந்து வாய்ப்பு தர வேண்டுமா? அல்லது அணிக்கு தேவை என்னவென்பதை பூர்த்தி செய்ய வேண்டுமா? அழுத்தமான சூழல்களில் யார் உதவுவார்கள்? கடந்த காலங்களில் யார் நமக்காக வெற்றிகளை தேடி தந்தார்? இதனையெல்லாம் யோசித்து அணியில் தேர்வுகள் இருக்குமா எனக் கேள்வி எழுகிறது.

இஷானும் வெளியேற்றம்

இஷானும் வெளியேற்றம்

இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்தவுடனேயே வெளியேற்றப்பட்டு விட்டார். அவருக்கு மாற்றாக சுப்மன் கில்லை கொண்டு வந்துள்ளனர். தொடர்ச்சியாக ஒரே மாதிரியான ஃபார்மை சுப்மன் கில் வைத்துள்ளார். ஸ்வீப், புல் ஷாட், கட் ஷாட் என சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துகிறார். கில்லின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது போன்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 1, 2023, 22:03 [IST]
Other articles published on Feb 1, 2023
English summary
Spinner Ravichandran Ashwin raised a question for Team India Excluding Shikhar dhawan in the squad, here is the full details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X