For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்த்தையை பார்த்து பயன்படுத்துங்க.. சோயிப் அக்தருக்கு பதிலடி தந்த ஆப்கான் .டிவிட்டரில் மோதல்

ஷார்ஜா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களையும், ரசிகர்களையும் கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் முன்னள் வீரர் சோயிப் அக்தருக்கு, கடும் கண்டனங்கள எழுந்துள்ளன.

Recommended Video

IND vs AFG Virat Kohli-ன் அசுரத்தனமான ஆட்டம்! அபார சதம் *Cricket

வார்த்தையை பார்த்து பேசுங்க என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சஃபிக் ஸ்டானிக்சாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விளையாடிய ஆட்டத்தில் வீரர்களிடையே மோதல் வெடித்தது.

அணிக்குள் வரும் 3 சீனியர் வீரர்கள்.. இலங்கைக்கு எதிரான இந்திய ப்ளேயிங் 11.. ரோகித் படு மாஸ் ப்ளான்! அணிக்குள் வரும் 3 சீனியர் வீரர்கள்.. இலங்கைக்கு எதிரான இந்திய ப்ளேயிங் 11.. ரோகித் படு மாஸ் ப்ளான்!

என்ன காரணம்?

ஆசிஃப் அலி சிக்சர் அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தததும், ஆப்கான் பந்துவீச்சாளர் ஃபரித் கொண்டாடினார். இதனால் கடுப்பான ஆசிஃப் அலி, தன்னுடைய பேட்டை எடுத்து, ஃபரித்தை அடிக்க முயன்றார். இது ஆப்கான் ரசிகர்களை கோபம் அடைய செய்தது. போட்டி முடிந்ததும் ஆத்திரமடைந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள், கேலரியில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களை துரத்தி துரத்தி அடித்தனர். இருக்கைகளும் பறந்தன. இதனால் மைதானமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

சோயிப் அக்தர் பேச்சு

சோயிப் அக்தர் பேச்சு

இதனையடுத்து, இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இதை முதல் முறை செய்யவில்லை. அவர்கள் எப்போதும் இப்படி தான் நடந்து கொள்கிறார்கள். கிரிக்கெட்டில் வெற்றி, தோல்வியை ஏற்று கொள்ளும் பக்குவம் வேண்டும். ஆப்கானிஸ்தான் வீரர்களும், ரசிகர்களும் எப்படி நடந்து கொள்வது என்று கற்றுகொள்ளுங்கள். அப்போது தான் விளையாட்டில் முன்னேற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பதிலடி

பதிலடி

எனினும் சோயிப் அக்தரின் குற்றச்சாட்டு ஒரு தலைப்பட்சமானது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சஃபிக் ஸ்டானிக்சாய், பார்வையாளர்களின் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது. இது கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் முறை சம்பவம் அல்ல.

தடை விதியுங்கள்

தடை விதியுங்கள்

நீங்கள் கபிர் கான், லத்திஃப், இன்சமாம் உல் ஹக் ஆகியோரை கேட்டு பாருங்கள், ஆப்கான் மக்கள் வந்தவர்களை எப்படி வரவேற்று பார்த்து கொள்வார்கள் என்று. நான் உங்களுக்கு ஒரு அறிவுரையை கூறுகிறேன். அடுத்த முறை பார்த்து பேசுங்கள், எங்கள் நாட்டை இழக்காதீர்கள் என்று கூறியுள்ளார். இதனிடையே, எதிரணி வீரர்கள் மீது கையை வைத்து தாக்கிய ஆசிஃப் அலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Story first published: Thursday, September 8, 2022, 16:57 [IST]
Other articles published on Sep 8, 2022
English summary
Asia cup 2022 – Afghanistan EX official gives befitting reply to Shoaib akthar வார்த்தையை பார்த்து பயன்படுத்துங்க.. சோயிப் அக்தருக்கு பதிலடி தந்த ஆப்கான் .டிவிட்டரில் மோதல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X