For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னோட்டம்.. இலங்கை அணியில் 2 பேர் நீக்கம்.. நஷிம் ஷாவுக்கு ஓய்வு

துபாய் : ஆசிய கோப்பை தொடர் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தானும், இலங்கையும் தகுதி பெற்று 2 நாள் ஆன நிலையில், இன்று சமிபிரதாய ஆட்டமாக கடைசி போட்டி நடைபெறுகிறது.

இதில் இலங்கை அணியும், பாகிஸ்தானும் மோதும் ஆட்டம் சமிபிரதாய ஆட்டமாக நடைபெறுகிறது.

இதில் யார் வென்றாலும், தோற்றாலும் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் இரு அணிகளும் சில வீரர்களுக்கு ஓடயவு வழங்கி இருக்கிறார்கள்.

“கிரிக்கெட்டால் காயம் ஏற்படவில்லை”.. ஜடேஜா குறித்து வெளியான உண்மை தகவல்.. பிசிசிஐ கடும் ஆத்திரம்! “கிரிக்கெட்டால் காயம் ஏற்படவில்லை”.. ஜடேஜா குறித்து வெளியான உண்மை தகவல்.. பிசிசிஐ கடும் ஆத்திரம்!

டாஸ்

டாஸ்

டாஸ் வென்று முதலில் பந்தவீசும் அணியே வெற்றி பெறுகிறது. இதை சொல்லி வைத்தது போல் இலங்கை அணி கேப்டன் ஷனாகா டாஸ் வெல்கிறார். இன்றைய ஆட்டத்திலும் அவர் வெற்றி பெற்று பந்துவீசுவதாக அறிவித்தார். இந்த இடத்தில் அவர் ஒரு சிறிய தவறு செய்து விட்டார். ஒரு வேலை பைனலில் அவர் முதலில் பேட்டிங் செய்யும் நிலை வந்தால், அதற்கு பயிற்சி எடுக்கும் வகையில் இன்று முதலில் பேட்டிங் செய்து இருக்கலாம்.

2 மாற்றம்

2 மாற்றம்

ஆனால் தோல்வி அடைய கூடாது என்பதற்காக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், டாஸ் எனக்கு சாதகமாக விழுவது அதிர்ஷ்டம் தான். ஆனால், எல்லா போட்டிகளிலும் இப்படி நடைபெறுமா என்று தெரியவில்லை. இன்றைய ஆட்டத்தில் அசலாங்காவுக்கு பதில் தனஞ்செய்யா டி சில்வா மற்றும் பெர்னான்டோவுக்கு பதில் பிரமோத் மதுசான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பாபர் அசாம்

பாபர் அசாம்

இதனைத் தொடர்ந்து பேசிய பாபர் அசாம், நாங்களும் பந்துவீச தான் இருந்தோம். இன்றைய போட்டியில் நஷிம் ஷா, ஷதாப் கான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கி இருக்கிறோம். இறுதிப் போட்டிக்கு முன்பு சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க நினைத்தோம். இன்றைய ஆட்டத்தில் காதிர் மற்றும் ஹசன் அலி விளையாடுகிறார்கள்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

பாகிஸ்தான் 1, பாபர் அசாம், 2, முகமது ரிஸ்வான், 3, ஃபக்கர் ஷமான், 4, இஃபதிகார் அகமது, 5, குஷ்தில் ஷா, 6ஆசிப் அலி, 7, முகமது நவாஸ், 8, ஹசன் அலி, 9, ஹாரிஸ் ரவுஃப், 10. காதிர், 11, முகமது ஹஸ்னாயின்.

இலங்கை 1, நிசாங்கா, 2, குசேல் மெண்டிஸ், 3, தனஞ்செய்யா, 4, குணதிலாகா, 5, ராஜபக்சா, 6, ஷனாகா, 7. ஹசரங்கா, 8, கருணரத்னே, 9, பிரேமோம், 10. தீக்சனா, 11, மதுசங்கா

Story first published: Friday, September 9, 2022, 20:04 [IST]
Other articles published on Sep 9, 2022
English summary
Asia cup 2022 – Pak vs SL clash in dead rubber ahead of Final game ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னோட்டம்.. இலங்கை அணியில் 2 பேர் நீக்கம்.. நஷிம் ஷாவுக்கு ஓய்வு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X