For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை இறுதி போட்டி.. இலங்கை, பாகிஸ்தான் மோதல்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு?

துபாய் : ஆசிய கோப்பை தொடர் இறுதிப் போட்டி பாகிஸ்தானும், இலங்கையும் நாளை ஞாயிற்றுகிழமை மோதுகிறது. இரண்டு அணிகளுமே பலமாக காணப்பட்டாலும், நேற்றைய சம்பிரதாய ஆட்டத்தில் வென்ற உத்வேகத்துடன் இலங்கை அணி உள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை இதுவரை 10 முறை இறுதிப் போட்டியில் விளையாடி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை 2 முறை தான் ஆசிய கோப்பையை வென்று இருக்கிறது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதி இருக்கிறார்கள். இதில் இலங்கை 2 முறையும், பாகிஸ்தான் ஒரு முறையும் வென்று இருக்கிறது.

அவரை ஓரம்கட்டியது பெரும் தவறு.. ஆசிய கோப்பையில் இந்தியாவின் சொதப்பல்.. சேவாக் கடும் விளாசல்! அவரை ஓரம்கட்டியது பெரும் தவறு.. ஆசிய கோப்பையில் இந்தியாவின் சொதப்பல்.. சேவாக் கடும் விளாசல்!

டாஸ்

டாஸ்

டாஸ் வென்று முதலில் பந்தவீசும் அணியே வெற்றி பெறுகிறது. இதனால் டாஸ் நாளைய போட்டியில் பெரும் முக்கியத்துவம் பெரும். இலங்கை அணி கேப்டன் ஷனாகாவுக்கு ஆதரவாக தான் சூப்பர் 4 சுற்றில் டாஸ் விழுந்தது. இதனால் இன்னும் ஒரு முறை அவருக்கு லக் அடிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இலங்கை அணியில் அசலங்காவுக்கு பதில் தனஞ்செய்யாவே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதே போன்று இலங்கை அணியின் வெற்றிக்கு காரணம், அவர்களுடைய பயம் அறியாத அதிரடி ஆட்டம் தான். இதனால் நாளைய போட்டியிலும் அதனை அவர்கள் கடைப்பிடித்தால் பாகிஸ்தானுக்கு அது சிக்கலை ஏற்படுத்தும். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, நேற்றைய ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்பட்டு இருந்த ஷதாப் கான், நஷிம் ஷா அணிக்கு திரும்புவதால், அந்த அணியின் பலம் அதிகரிக்கும்.

பாகிஸ்தான் குறை

பாகிஸ்தான் குறை

பாபர் அசாம் தொடர்ந்து ஆசிய கோப்பை தொடரில் சொதப்பி வருகிறார். இதனால் நாளைய ஆட்டத்திலாவது அவர் அதிரடியை காட்ட வேண்டும். முகமது ரிஸ்வானை நம்பியே அந்த அணியின் பேட்டிங் உள்ளது. இதனால், நடுவரிசை வீரர்களும் ஒரு அளவிற்கு கைக் கொடுத்தால் மட்டுமே இலங்கைக்கு நெருக்கடி தர முடியும். ஹசரங்கா பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் 16 ஓவர்கள் வீசி 11 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதனால், அவரை சமாளிப்பது கொஞ்சம் சிக்கலை கொடுக்கும்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

பாகிஸ்தான் 1, பாபர் அசாம், 2, முகமது ரிஸ்வான், 3, ஃபக்கர் ஷமான், 4, இஃபதிகார் அகமது, 5, குஷ்தில் ஷா, 6ஆசிப் அலி, 7, முகமது நவாஸ், 8, ஷதாப் கான், 9, ஹாரிஸ் ரவுஃப், 10. நஷிம் ஷா, 11, முகமது ஹஸ்னாயின்.

இலங்கை 1, நிசாங்கா, 2, குசேல் மெண்டிஸ், 3, தனஞ்செய்யா, 4, குணதிலாகா, 5, ராஜபக்சா, 6, ஷனாகா, 7. ஹசரங்கா, 8, கருணரத்னே, 9, பிரேமோம், 10. தீக்சனா, 11, மதுசங்கா

Story first published: Saturday, September 10, 2022, 21:55 [IST]
Other articles published on Sep 10, 2022
English summary
Asia cup 2022 – Pakistan vs srilanka fights each other in final ஆசிய கோப்பை இறுதி போட்டி.. இலங்கை, பாகிஸ்தான் மோதல்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X