For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓஹோ.. இது அந்த ஆடுகளமா ? ஆசிய கோப்பைக்காக ஸ்பெஷல் ஆடுகளம்.. யாருக்கு சாதகம் தெரியுமா?

துபாய் : 2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டிக்காக துபாய் கிரிக்கெட் சங்கம் நிர்வாகிகள் ஸ்பெஷல் விக்கெட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இலங்கையும் விளையாடுகிறது. இந்த தொடரில் 2 போட்டிகளை தவிர டாஸ் வென்று பந்துவீசும் அணியே வெற்றி பெற்று இருக்கிறது.

இது ரசிகர்களிடையே மிகவும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் தான், போட்டியை நடத்தும் துபாய் கிரிக்கெட் சங்கம், புதிய முயற்சியை செய்துள்ளது.

இது மாறவே மாறாதா??.. ஆசிய கோப்பை இறுதிப்போட்டி.. ஐசிசி மீது கோபத்தை கொட்டும் ரசிகர்கள்!!! இது மாறவே மாறாதா??.. ஆசிய கோப்பை இறுதிப்போட்டி.. ஐசிசி மீது கோபத்தை கொட்டும் ரசிகர்கள்!!!

விமர்சனம்

விமர்சனம்

அதன் படி, துபாய் கிரிக்கெட் மைதானத்தில் மொத்தம் 4க்கும் மேற்பட்ட ஆடுகளம் உள்ளது. இதில், ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு ஆடுகளம் பயன்படுத்தப்படும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில் மீண்டும் போட்டி நடைபெற்றால் பந்து பேட்டிற்கு வருவது சிரமமாக இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சிரமப்படுவார்கள்.

ஸ்பெஷல் ஆடுகளம்

ஸ்பெஷல் ஆடுகளம்

இதனால் இறுதிப் போட்டிக்காக இதுவரை இந்த தொடரில் பயன்படுத்தாத ஒரு ஆடுகளத்தில் இன்றைய ஆட்டம் விளையாடப்படுகிறது. இதன் மூலம், பந்து நன்றாக பேட்டிற்கு வரும். போட்டி நடைபெறும் 40 ஓவரிலும் இரு அணிகளும் எதை பற்றி நினைக்காமலும் தைரியமாக விளையாடலாம்.

ஒரு வருடம்

ஒரு வருடம்

மேலும், இந்த ஆடுகளம் பயன்படுத்தப்பட்டு கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிறதாம். கடைசியாக 2021 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில் தான் இன்றைய போட்டி நடைபெறுகிறது. இதனால், இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு கொஞ்சம் கூடுதல் சாதகமாக களம் செயல்படும். இதற்கு காரணம், ஒரு ஆண்டாக பயன்படுத்தப்படாத ஆடுகளம் என்பதால், முதலில் சில ஓவருக்கு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும். அதில் பேட்ஸ்மேன்கள் தப்பித்தால் பின்னர் அதிரடியாக விளையாடலாம்.

கடைசியாக நடந்த போட்டி

கடைசியாக நடந்த போட்டி

கடைசியாக இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. இதனை ஆஸ்திரேலியா 7 பந்துகள் எஞ்சிய நிலையில், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டமும் இதே போல் செல்ல நிறைய வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Sunday, September 11, 2022, 19:50 [IST]
Other articles published on Sep 11, 2022
English summary
Asia cup 2022 – Special Pitch used for Pak vs SL Finals ஓஹோ.. இது அந்த ஆடுகளமா ? ஆசிய கோப்பைக்காக ஸ்பெஷல் ஆடுகளம்.. யாருக்கு சாதகம் தெரியுமா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X